ஹீரோ ஆகிறாரா சிம்ரன் மகன் அதீப்? வெளியான ஸ்டைல் ஃபோட்டோ!

ஹீரோ ஆகிறாரா சிம்ரன் மகன் அதீப்? வெளியான ஸ்டைல் ஃபோட்டோ!

தமிழில் கோலோச்சிய ஹீரோயின்களில் முக்கியமானவர் சிம்ரன். பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர்,   1995ல் ‘சனம் ஹர்ஜாய்’ என்ற இந்திப் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ஆனாலும்  வெற்றிகரமான தமிழ் ஹீரோயினாகவே வலம் வந்தார்.

விஜய், சூர்யாவுடன் நேருக்கு நேர் படத்தில் ஒப்பந்தமானாலும், ஒன்ஸ்மோர், விஐபி படங்கள்தான் முதலில் வெளியாகின. அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து, பல வருடங்கள் முன்னணி நாயகியாக திகழ்நாதார் சிம்ரன். சிறந்த நடிப்பாற்றல் மட்டுமின்றி, அழகு.. குறிப்பாக இடுப்பசைவுக்கு பெயர் பெற்றவராக விளங்கினார்.

இந்நிலையில்  2003ல் தீபக் பக்கா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு, அதீப் பக்கா,  ஆதித் வீர் என  இரண்டு மகன்கள் உள்ளனர்.

இருவரும் குர்கானில் உள்ள ‘லான்சர்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி’யில் படித்தனர். மூத்த மகன் அதீப் பக்கா பள்ளிப் படிப்பை முடித்து, தற்போது கனடா நாட்டில்  உள்ள. ‘யார்க் பல்கலைக்கழக’த்தில்  படித்து வருகிறார்.

இவருடன் இருக்கும் படத்தை சிம்ரன் தற்போது வெளியிட்டு இருக்கிறார். ஏற்கெனவே தனது மகன்களின் படங்களை பலமுறை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார் என்றாலும், இப்போது இந்த விசயம் கவனம் பெற்று இருக்கிறது.

காரணம்..  21 வயதை நிறைவு செய்துள்ள அதீப் பக்கா,  ஹீரோவாக நடிக்க தாயாராகிறாரா என்பதே!

சமீபத்தில்,  டூரிஸ்ட்  பேமிலி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார் சிம்பரம். தற்போதும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது மகனும் திரைத்துறையில் களம் இறங்குவதாக கிளம்பியுள்ள யூகம் கவனிக்க வைத்து இருக்கிறது.

நாம் அட்வான்ஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம்.

 

 

Related Posts