குரூப் 1 முதல்நிலை தேர்வு: இதிலும் சைதையாரின் ‘மனித நேய மையம்’ சாதனை!
தமிழ்நாடு அரசின், டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், இதிலும் மனித நேயர் சைதையாரின் மனித நேய மைய மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.குரூப் 1 தேர்வு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 1 பதவியில் அடங்கிய துணை மாவட்ட ஆட்சியர், துணை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வணிக வரி உதவி ஆணையர், உள்ளிட்ட 90 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இப்பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வை கடந்த ஜூலை 13ம் தேதி நடத்தியது. இத்தேர்வில் 1 லட்சத்து 59 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.
மனித நேய கல்வியகம் சாதனை!
இந்த முதல் நிலை தேர்வுக்கான முடிவு, இன்று ( செப்.2) வெளியிடப்பட்டது.
தேர்வு எழுதியவர்களில் 1907 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இவர்களில் சென்னை பெருநகர மாநகாராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின், ‘மனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியக’த்தில் பயின்ற 49 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். (மாணவிகள் 18 பேர், மாணவர்கள் 31 பேர்.)
தேர்ச்சி பெற்றவர்கள், டிசம்பர் மாதம் 10 -13 தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ள முதன்மைத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். இவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும்.சைதையாரின் மனிதநேயம்!
இந்நிலையில், மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் சைதை துரைசாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
“அடுத்து நடக்கும் குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கும் ஊக்கத் தொகையுடன் கூடிய பயிற்சியை, ‘மனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம்’ அளிக்கும். ஏற்கெனவே இங்கே பயிற்சி பெற்று தேறியவர்கள் மட்டுமல்ல, முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இதர மாணவர்களும் இந்த ஊக்கத்தொகையுடன் கூடிய இலவச பயிற்சியில் சேரலாம்.
சென்னையில் உள்ள மனித நேயம் ஐ.ஏ.எஸ். கல்வியகத்தில் பதிவு செய்யலாம். நேரடியாக வர இயலாதவர்கள், எமது இணையதளமான WWW.mntfreeias.com ல் பதிவு செய்து கொள்ளலாம்.
தவிர, முதன்மை தேர்வுக்கு தேவையான பாடத்திட்டங்கள் எமது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவற்றைப் பயன்படுத்தி வீட்டில் இருந்த படியே பயிற்சி பெறலாம்.
மேலும் தகவல்களுக்கு 044 -24358373, 24330095, 9840439393 ஆகிய எண்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை தொடர்பு கொள்ளலாம்” என்று மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் திரு. சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.மனித நேயத்தின் மக்கள் பணி!
திரு.சைதை துரைசாமி, திருமதி. மல்லிகா துரைசாமி, திரு.வெற்றி துரைசாமி மற்றும் திருமதி வசுந்தரா ஆகியோரால் 2005 ஆம் ஆண்டு ‘மனித நேயம் அறக்கட்டளை’ துவங்கப்பட்டது.
சமுதாய மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு உதவுவேத இவர்களின் – இந்த அறக்கட்டளையின் – ஒரே நோக்கம்.
‘மனித நேயம் அறக்கட்டளை’ சார்பில், ‘மனித நேயம் ஐஏஎஸ் கட்டணமில்லா கல்வியகம்’ கடந்த 19 ஆண்டுகளா கமக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தை சேர்ந்த அனைத்து தரப்பு மாணவ – மாணிவிகளும் இந்திய அளவில் உயர் பதவிகளான ஐஏஎஸ்,ஐபிஎஸ், போன்றவற்றிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன் செயல்படுகிறது.
இதுவரை ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர் ஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட மத்திய அரசு உயர் பதவிகளுக்கும், தமிழ்நாடு அரசின் குரூப் 1,II உள்ளிட்ட மாநில அரசு உயர் பதவிகளுக்கும் 4000–க்கும் மேற்பட்ட மாணவ – மாணவயர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் மாநில மற்றும் தேசிய அளவிலும் பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர்.
ஏற்கனவே UPSC முதல்நிலை தேர்வுக்கான இணைய வழி பயிற்சி, மனித நேய மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது TNPSC க்கும் இணையவழி பயிற்சிக்கான கானொளிகளும் அளிக்கப்படுகின்றன.
சமூக – பொருளாதார ஏற்றத் தாழ்வு காரணமாக ஏற்படும் கற்றல் இடைவேளியை முற்றிலும் நீக்கி, அனைத்து மாணாக்கருக்கும் சம வாய்ப்பளிக்கும் சூழலை ஏற்படுத்துவதே ‘மனித நேயம் ஐஏஎஸ் கட்டணமில்லா கல்வியகம்’ கொண்டுள்ள குறி்க்கோள்.