ரஜினியின் ‘வேட்டையனுடன்’ மோதும் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’!

ரஜினியின் ‘வேட்டையனுடன்’ மோதும் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’!

ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படம் வெளியாகும் அக்டோபர் 10 அன்று, அதிரடி டார்க் காமெடி மூவியாக  உருவாகி இருக்கும் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படம் வெளியாகிறது.

ஆக்.கே. ட்ரீம் ஃபேக்டரியின் டி.ராதாகிருஷ்ணன், க.எம்.பி. புரடசக்சன்ஸ் எம்,புவனேஸ்வரன், எஸ்.பி.எம். ஸ்டூடியோஸ்  ஷாஜு சி ஆகியோர்  இணைந்து தயாரிக்கும் திரைப்படம் இது.

‘பேய் இருக்க பயமேன்’ திரைப்படத்தை இயக்கி நடித்த  சீ கார்த்தீஸ்வரன், இத்திரைப்படத்தை இயக்கி கதை நாயகனாக நடித்து உள்ளார்.  முக்கிய கதாபாத்திரத்தில் லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி,  பிளாக் பாண்டி, ஆதவன், மிருதுளா, , தீட்சண்யா, மஞ்சு  உள்ளிட்டோர் தோன்றுகின்றனர்.

ஶ்ரீகாந்த் தேவா இசையமைக்க, இசையமைப்பாளர் தேவா, சின்னகுயில் சித்ரா,  நடிகர் ஜெய்,  சைந்தவி ஆகியோர் பாடல்கள் பாடியுள்ளனர்.  சஜின் சி படத்தொகுப்பு செய்ய, என்.எஸ். ராஜேஷ்குமார் ஒளிப்பதி செய்துள்ளார்.  சுரேஷ் சித் நடன இயக்கத்தை கவனிக்க, ஜாக்கி ஜான்சன் ஸ்டண்ட் மாஸ்டராக  பணி புரிகின்றனர்.

சென்னை, மும்பை, காஷ்மீர், குளுமணலி, கேரளா, பெங்களூரு ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைப்பெற்று வருகிறது.படத்தை இயக்கி நடித்துள்ள  சீ கார்த்தீஸ்வரன், ” மக்களை ஏமாற்றி எப்படி எல்லாம் பணம் பறிக்கிறார்கள் என்பதை  உண்மை சம்பவங்களின் அடிப்படையில் டார்க் காமெடி வகையில் வெளிச்சம் போட்டு காட்டி யு  உள்ளோம்.  நிஜத்தில் பணத்தை பறிகொடுத்தவர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்” என்றார்.

விஜயதசமியை முன்னிட்டு வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது..