எழுந்து வா பாலண்ணா..இயக்குநர் ராசி அழகப்பன் உருக்கமான வரிகள்
சென்னை: கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வந்துகொண்டிருக்கிறது. அவருக்கு தொடர்ந்து ECMO மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் ஐசியூவில் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவர் நலம் பெற்று வரவேண்டும் என பிராத்தணை செய்து வருகின்றனர். அந்த வரிசையில் பிரபல இயக்குநர் ராசி அழகப்பன் அவர்கள் உருக்கமாக எழுத்து நடையில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். வரிகளை வரிசைப்படித்தி அவருக்காக எழுந்து வா அண்ணா…
எழுந்து வா பாலண்ணா
இரவென்ன செய்யும்
பகலெங்கு போகும்
செவியென்ன கேட்கும்
உன் பாடல் அன்றி !?
ஆயிரம் நிலவுகள்
உன்குரல் தேடி
திசையெட்டும் சென்று
மழலை போல் நிற்கும்.
காற்றுக்குள் நீ சேர்த்த
சொற்கூட்டமெல்லாம்
புதுப்பாடல் கேட்க
பசியோடு நிற்கும்.
ஓசைக்கு ஆசை வந்த
அழகன் நீ!
ஸ்ருதிக்கு சுவை கூட்ட
வந்தவன் நீ!
சொல்லுக்கு சுவாசத்தை
தந்தவன் நீ!
ஓங்காரப் பெருவெளியின்
அதிசயன் நீ!
ஒளிக்கீற்று வியாசனே
கை நீட்டி வா!
காலத்தை வென்றிடவே
விரைவாக வா!
ராஜாக்கள் கை கூப்பி
அழைக்கின்றார் வா அண்ணா!
ரசித்தவர்கள் அழுதபடி
தொழுகின்றார் வா அண்ணா !
பாலண்ணா !
எழுந்து வா அண்ணா!
எம்மா பாரண்ணா!!
–ராசி அழகப்பன்
. யாழினி சோமு