அதிரவைக்கும் கேரள நிலச்சரிவு குறித்த படம் பூமிகா?

சென்னை; பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், தயாரிப்பாளராகவும் சிறந்த படங்களை அளித்து வருகிறார்.  தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானத்துடன்  இணைந்து “ஸ்டோன் பெஞ்ச்”  பட நிறுவனத்தை உருவாக்கினார்  கார்த்திக் சுப்புராஜ். இந்நிறுவனம்,  முதன் முதலில் 2016ம் ஆண்டு அவியல் என்ற படத்தை தயாரித்து வெளியிட்டது.

தொடர்ந்து இந்நிறுவனம் தயாரித்த மேயாத மான், மெர்குரி படங்கள், ரசிகர்களை பெரிதும் ஈர்த்தன.

இந்த நிலையில், ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் படம் மற்றும்,   ரதீந்தின் ஆர் பிரசாத்  இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும், ‘பூமிகா’ ஆகிய  படங்கள் தற்போது உருவாகி வருகின்றன. இந்த இரு படங்களின் இயக்குநர்களும், அறிமுக இயக்குநர்களே.

பூமிகா படம், ஐஸ்வர்யா ராஜேஷ்  நடிக்கும்  25வது படம்.

இந்த படத்தின் டைட்டில் மோஷன் லுக் போஸ்ட்டரை சிவகார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ளார்.

மிகச் சில விநாடிகளே வரும் இந்த வீடியோ ரசிக்க வைப்பதோடு அதிரவைப்பதாகவும் உள்ளது.

அடர்ந்த காடு.. அதை ஒட்டிய சாலை.. அதில் விரிசல் விழுகிறது.. பக்கத்திலேயே சாலை அறிவிப்பு “உள்ளே நுழையாதே” என எச்சரிக்கிறது…

இதையடுத்து காட்டை அழிப்பதால் ஏற்படும் விபரீதங்களை சொல்லும் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீபத்தில் கேரள மாநிலம் மூணாறு மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 60 பேர், பலியானார்கள்.

இந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு பூமிகா படம் உருவாக்கப்படுகிறதோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

யாழினி சோமு 

Related Posts