’சூரரைப் போற்று’ அக்டோபர் 30 அமேசான் ஓடிடி தளத்தில்..!

 சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் சூரரை போற்று. திரைப்படத்தில் கதாநாயகனாக சூர்யாவும், கதாநாயகியாக அபர்ணா பாலமுரளியும் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் பாபு, பரேஷ் ராவல் ஆகியோரும் நடித்துள்ளனர்.

சூரரைப்போற்று  அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையிடப்படுகிறது.

அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடிகள், அமேசான் ஒரிஜினல்ஸ், அமேசான் பிரைம் மியூசிக்கில் விளம்பரமில்லா இசை, இந்தியா முழுவதும் பிரைம் ரீடிங்கில் வரம்பற்ற வாசிப்பு மற்றும் பிரைம் கேமிங் கண்டெண்ட்  அனைத்தும் ஒரு மாதத்திற்கு  ரூ.129 ரூபாயில் கிடைக்கிறது.

சூரரை போற்று படத்தின் நேரடி ஒளிபரப்பு அக்டோபர் 30-ஆம் தேதி 2020 திட்டமிட்டப்படி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர் டெக்கனை நிறுவிய ஓய்வுபெற்ற ராணுவ கேப்டன் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டுதான்  சூரரை போற்று படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் 200 நாடுகளிலும் மற்றும் அக்டோபர் 30 முதல் தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் என அனைத்து மொழிகளிலும்  ஒளிபப்படுகிறது.

கொரோனா காலகட்டத்தில் பார்வையாளர்களை மகிழ்விக்கப் போகிறது சூரறை போற்று..

. யாழினி சோமு

Related Posts