இ-பாஸ் ரத்து! அதிரடியாக அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம்.
டெல்லி; கொரோனா ஊரடங்கில் பொதுமக்கள் வெளியூர் செல்வதற்கு இ-பாஸ் போன்ற கட்டுப்பாடுகள் தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக முடிவெடுத்துள்ளது. மேலும் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கு எந்த் கட்டுப்பாடு விதிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவுவது தடுப்பதற்காக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பொது போகுவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.
உள் மாவட்டங்களுக்கு மட்டும் தனிநபர்கள் பயணிக்க அனுமதிக்கப்பட்டது. வெளிமாவட்டங்கள், மாநிலங்களுக்கு கட்டாயமாக இ-பாஸ் அவசியம் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்த பாஸ் பெறுவது என்பது எளியதாக இல்லை. கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டதால் பலரும் அவதிக்கு உள்ளாக்கப்பட்டனர். பல விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
இ பாஸ் அவசியம் என்பதால் பலர் அவசியத்துற்கு கூட போகமுடியாத சூழ்நிலை உண்டானது. சில உயிரிழப்பும் ஏற்பட்டது’ இதனால் பொதுமக்களிடத்தில் கடும் எதிர்ப்பு உண்டானது. இதன் காரணமாக தமிழகத்தில் இ-பாஸ் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. கடந்த 17ஆம் தேதி முதல் தமிழகத்தில் இ- பாஸ் நடைமுறை எளிதாக்கப்பட்டது. விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இபாஸ் வழங்க ஏற்பாடு செய்யப்ட்டது.
ஆனால் போக்குவரத்துக்கு எந்த தளர்வும் கொடுக்கப்படவில்லை. அத்தியாவசிய பொருள், ஏற்றுமதி செய்யும் வாகனங்களுக்கும் தடை எதுவும் விதிக்கவிதிக்கப்படவில்லை.
இந்த சூழ்நிலையில் மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் தனிநபர் மற்றும் சரக்கு வாகன போக்குவரத்துக்கு மாநிலத்துக்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையில் எந்த தடையும் இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இ-பாஸ் நடைமுறையால் பொதுமக்கள் பயணிக்க கட்டுப்பாடுகள் இருப்பதால் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். மாநில அரசுகள் இ-பாஸ் கட்டுப்பாடுகளை விதிக்க கூடாது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலை மீறும் வகையில் செயல் படகூடாது என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைப் பற்றி அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் இது சம்பந்தமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு எடுப்பார் என்றார். மாநிலங்களுக்கிடையேயான சரக்குப் போக்குவரத்து மற்றும் தனிநபர் செல்வதற்கு ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கொரோனாவை கட்டுப்படுத்துவதே தமிழக அரசின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
. யாழினி சோமு