“மின்னல் முரளி’’ திருவோண தினத்தில் டீஸர் வெளியிடும் வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர்!
பாசில் ஜோசப் உருவாக்கும் இத்திரைப்படத்தில் சமீர் தாஹீர் ஒளிப்பதிவு செய்ய ஹாலிவுட் புகழ் விலாட் ரிம்பர்க் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார்.
வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் தங்கள் நிறுவனத்தின் மிகப்பெரும் படைப்பாக நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில், பன்மொழியில் தயாரிக்கும் சூப்பர் ஹீரோ படத்திற்கு “மின்னல் முரளி” எனப்பெயரிட்டுள்ளது. இப்படத்தின் டீஸர் திருவோண தினத்தில் வெளியாகவுள்ளது. பெங்களூர் டேஸ், முந்திரிவல்லிகள் தாளிர்கொம்பல் போன்ற மெகா ஹிட் படங்களை தந்த (Weekend Blockbuster ) வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர், தங்கள் நிறுவனத்தின் மூலம் மிகப்பெரும் பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் ஹிந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது.
மாநிலம் கடந்து ரசிகர்களை ஈர்க்கும் மிகப்பெரிய அடுத்த கட்ட வளர்ச்சியை வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் நிறுவனம் இப்படம் மூலம் முன்னெடுத்துள்ளது.
மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் நிறுவனம் சார்பில் ஷோபியா பால் தயாரிக்கிறார். பாசில் ஜோசப் இயக்கும் இத்திரைப்படத்தை சமீர் தாஹீர் ஒளிப்பதிவு செய்கிறார்.
விலாட் ரிம்பர்க் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடிப்பில் உருவான ஜெமினி மேன், தி லாஸ்ட் விட்ச் ஹண்டர், நெட்ப்ளிக்ஸ் லூசிஃபர், டெல் /டேல் சீரிஸ், பாகுபலி 2, சல்மான் கான் நடிப்பில் சுல்தான் போன்ற மிகப்பெரும் படைப்புகளில் சண்டைப்பயிற்சி இயக்குநராக இவர் பணியாற்றியுள்ளார்.
முழுக்க முழுக்க கேரள கிராமப்புறங்கள் மற்றும் இதுவரை கேமரா காணாத கேரள லோகேஷன்களில் படமாக்கப்பட்டு வருகிறது..
படத்தின் சவால் மிகுந்த கலை இயக்கத்தை, மிக வித்தியாசமான செட்டுகளை வடுவமைக்கிறார் கலை இயக்குநர் மனு ஜகத். இப்படத்திற்கு இசை ஷான் ரஹ்மான். பாடல் வரிகள் மனு மஞ்சித்’ எழுத்து பணி அருண் அனிருதன் மற்றும் ஜஸ்டின் மேத்யூ. இந்த படம் நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்தாகும்.
யாழினி சோமு