இனிதே நடைபெற்ற மெட்ரோ நடிகர் சத்யாவின் திருமணம்

 

யமுனா படத்தில் கதாநாயகனாகவும் மெட்ரோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்திருந்தார்  நடிகர் சத்யா. அவரது திருமணம் 24-08-2020, திங்கள் கிழமை காலை அவரது சொந்த ஊரான  கரூர் To ஈரோடு மார்க்கத்தில் புன்னம் கிராமத்தில் உள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருகோவிலில் இனிதே நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.  மிக எளிய முறையில் நடைபெற்றது.  இத்திருமணத்தில் சரியாக காலை 6.45க்கு   மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார். விரைவில் வரவேற்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.  சத்யா நடித்து முடித்த ஒரு திரைப்படமும் கொரோனா நாட்கள் முடிந்த பிறகு வெளிவர உள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.

யாழினி சோமு 

Related Posts