64 ஆண்டுகளுக்கு பின் அதே தலைப்பில் ’தாய்க்கு பின் தாரம்’ இசை வெளியீடு..!

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடித்து 1956ஆம் ஆண்டு வெளிவந்த படம் ’தாய்க்கு பின் தாரம்’ ஒரு தாயின் அன்புக்கு இணையாக ஒரு தந்தையால் ஈடு கொடுக்க முடியாது என்பதை உணர்த்தும் விதமாக எடுக்கப்பட்டது.ஆனால் வாழ்க்கையின், வளர்ச்சியில் தந்தையின் பங்கும் அளப்பரியதே என்பதே உண்மை. ’தாயிக்கு பின் தாரம்’ என்றாலும் இந்த படத்தில் தந்தையை முன் நிருத்தி ஒரு பாடல் இடம் பெற்றிருக்கும். தந்தையைப் போல் உலகிலே

தெய்வம் உண்டோ… எனற பாடால்  அனைவரையும் உருகவைத்ததே உண்மை.

இந்தப் படம் வந்து கிட்டதட்ட 64 ஆண்டுகளுக்குப் பிறகு அதே படத்தலைப்புடன் துவாராகா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ’தாய்க்குபின் தாரம்’. இந்தப் படத்திற்கும் எம்.ஜி.ஆர் படத்திக்கும் என்ன தொடர்பு என்றால்’ படத்தின் தலைப்புதான்.

இயக்கம்; பிளேஸ் கண்ணன்

இசை இயக்குனர்: தரன்

பாடல்: மிர்ச்சி விஜய்

புகைப்படம் எடுத்தல் இயக்குனர்: ராஜேஷ் யாதவ்

ஆசிரியர்: ஆனந்த் ஜெரால்டின்

கலை: உமேஷ் ஜே குமார்

உடைகள்: பர்வீன் தமீன்

தயாரித்தவர்: துவாரகா ஸ்டுடியோஸ்

தர்ஷன் தியாகராஜா நடிப்பில்  மற்றும் ஆயிஷா நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் இசை வெளியாகியிருக்கிறது. அன்பு,பாசம், எதிர்பார்ப்பு என அனைத்தயும் கண் முன் கொண்டுவருகிறது படத்தின் காட்சி. உருகவைக்கும் காதல், காதலில் இருக்கும் தாய் அன்பு என நம்மை உருகவைத்திருக்திருக்கிறது  இயக்குனர் தாரனின் மொழியில்ல இசை.

யாழினி சோமு

Related Posts