‘எக்ஸாம்’ சீரிஸ்: மிரட்டும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்!
டைரக்டர் ஏ. சற்குணம் இயக்கி உள்ள ‘எக்ஸாம்’அதிரடி வெப் தொடரில், ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர், அதிரவைக்கும் செம வெயிட்டான ரோலில் ஸ்கோர் செய்திருக்கிறார்!
முதல் படத்திலேயே மிரட்டிய துரை சுதாகர்!
தன்னுடைய முதல் படமான ‘தப்பாட்டம்’ மூலமே ஒட்டுமொத்த கோலிவுட்டையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். அந்தப் படத்தில் இளநீரில் ஸ்ட்ரா போட்டு, அதைத் தன் காதலியின் வாயிலிருந்து இவர் உறிஞ்சிக் குடிக்கும் சீன் இருக்கிறதே… அது சாதாரண வைரல் இல்லை, விஸ்வரூப வைரல்!
எந்த அளவுக்கு என்றால், எக்ஸ் (X) தளத்தின் பாஸ் எலான் மாஸ்க் கண்ணிலேயே அந்தப் புகைப்படம் பட்டிருக்கிறது. அதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அவர், “எப்படியெல்லாம் புத்திசாலித்தனமாகச் சிந்திக்கிறார்கள்!” (How intelligence works) என வியந்து பாராட்டித் தன் பக்கத்திலேயே ஷேர் செய்தார். அந்த ஒரே ஒரு மேட்டர், சுதாகரை உலக அளவில் டிரெண்ட் ஆக்கியது!
வில்லத்தனத்திலும் கிங்!
அடுத்து, சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் வந்த களவாணி 2 படத்தில் வில்லன் வேடத்தில் மிரட்டி இருந்தார். அதே போல, வரலட்சுமி நடிப்பில் வெளிவந்த ‘டேனி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக அதிரடி காட்டினார்.
சசிக்குமார் நடிப்பில் வெளி வந்து பல வெற்றிகளை கொண்டாடிய“நந்தன்” திரைப்படத்திலும் சிறந்த கதாப்பாத்திரதில் தன் நடிப்பை வெளிப்படுத்தினர்.
எதிர்பார்ப்பில் ‘எக்ஸாம்’!
இப்போது சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எக்ஸாம்’ தொடரில், கதையின் போக்கையே தலைகீழாக மாற்றும் படு சஸ்பென்ஸான கேரக்டரில் பின்னியெடுத்துள்ளார் சுதாகர்.
தைகாரா என்ற மலைப்பாங்கான, கற்பனையான ஊரில் நடக்கும் ஒரு விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ஆகும். இதில் போலீஸ் அதிகாரியாக மீண்டும் தன் நடிப்பை சிறப்பாகவும் மாஸாகவும் வெளிப்படுத்தியுள்ளார், துரை சுதாகர்.
கதையில் ட்விஸ்ட் கொடுக்கும் அந்த ‘பவர்ஃபுல்’ ரோலில் துரை சுதாகர் இருப்பதால், 15-ம் தேதி, அமேஸான் ஃரைம் தளத்தில் வெளியாக உள்ள இத்தொடர் மீதானஎதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது!

