துருவ் விக்ரமின் பிரம்மாண்டமான #DV4: பூஜையுடன் கோலாகலத் தொடக்கம்!

 துருவ் விக்ரமின் பிரம்மாண்டமான #DV4: பூஜையுடன் கோலாகலத் தொடக்கம்!

திரையுலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், தமிழ் சினிமாவில் தனது நான்காவது மைல்கல்லை எட்டியுள்ளது. இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில், ஸ்டைலிஷ் ஸ்டார் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா இன்று பூஜையுடன் இனிதே தொடங்கியது!

#MythriTamil04 | #DV4

இந்தியா முழுவதும் பல பிரம்மாண்டமான படங்களைத் தயாரித்து முத்திரை பதித்துள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ், தற்போது துருவ் விக்ரமுடன் கைகோர்த்து, தமிழ் திரையுலகில் மீண்டும் ஒரு அதிரடியை நிகழ்த்தத் தயாராகிவிட்டது.துருவ் விக்ரமின் திரைப்பயணத்தில் நான்காவது படமாக அமையப்போகும் இப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டைல், சுறுசுறுப்பு, விறுவிறுப்பு என ரசிகர்களுக்குப் பிடித்தமான அனைத்து அம்சங்களும் இப்படம் முழுமைக்கும் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!

வெற்றிப் பயணத்தைத் தொடங்கியுள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் துருவ் விக்ரம் கூட்டணிக்கு வாழ்த்துகள்! படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்காக ஆவலுடன் காத்திருப்போம்!