ஹபீபி: ஃபர்ஸ்ட் லுக் சொல்வது என்ன?

ஹபீபி: ஃபர்ஸ்ட் லுக் சொல்வது என்ன?

நேசம் என்டர்டெயின்மென்ட் தயாரிக்க, பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி வழங்கும் திரைப்படம் ‘ஹபீபி’.

‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களின் மூலம் கவனத்தை ஈர்த்த மீரா கதிரவன் இயக்குகிறார்.

புதுமுகங்கள் நடிக்கும் நடிக்கும் இந்தப் படத்தில் இயக்குநர் கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்து உள்ளார்.

இதன் முதல் தோற்றப் போஸ்டர் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

பர்ஸ்ட் லுக் போஸ்டரில், இஸ்லாமிய குடும்பத்தின் புகைப்படம் உள்ளது. அனைவரும் மகிழ்ச்சியுடன் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போல உள்ளது.

படத்தின் தலைப்பான, ஹபீபி என்பதற்கு அரபி மொழியில் அன்பு, காதல் என்று அர்த்தம். அதே போல ‘அன்பின் வழியது உயிர் நிலை0’ என்ற திருக்குறள் வாசகமும் போஸ்டரில் இடம் பெற்று உள்ளது.

ஆகவே மனிதர்களுக்கிடையேயான பாசம், அன்பு, காதலை, இஸ்லாமிய பின்னணியில் சொல்லும் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
படம் பற்றி மீரா கதிவரன் கூறும்போது, “இது என் கனவு படம். இது போன்ற படம்தான் என் முதல் படமாக இருக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் திரைத்துறைக்கு வந்தேன். இதைச் சாத்தியப்படுத்த 20-வருடமாகி இருக்கிறது” என்று தெரிவித்து உள்ளார்.

 

 

Related Posts