‘கொரோனா தொற்று’ ஆயுர்வேத சிகிச்சையால் மீண்டோம்..! நடிகர் விஷால்
சென்னை: கொரோனா தொற்று உலகை மிரட்டிவருவதால் பிரபலங்கள் சிக்கி தவித்து வருகின்றனர். யாரையும் விட்டு வைக்காத கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டும் உயிரிழந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பிரபல நடிகர் விஷாலுக்கும் அவரது தந்தைக்கும் கொரோனா என தகவல் காட்டுத்தீயாய் பரவியது. அந்த தகவல் உண்மைதான் என தற்போது விஷால் தெரிவித்திருக்கிறார்.
எனக்கும் எனது தந்தைக்கும் கொரோனா தொற்று உறுதியானது உண்மைதான். என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகர் விஷால், அவரது அப்பா ஜி.கே.ரெட்டி ஆகிய இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இதனால் அவர்கள் மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொண்டு தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர் என செய்தியும் வெளியானது. இந்த செய்தி உண்மைதான என கேள்வி எழுந்தது. இப்போது அதை உறுதிசெய்திருக்கிறார் நடிகர் விஷால்.
அவர் தனது ட்விட்டரில் இதுபற்றி தெரிவித்திருக்கிறார். ‘எனது தந்தைக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவருக்கு நான் உதவியாக இருந்தேன். அதனால் எனக்கும் அதற்கான அறிகுறி தென்பட்டது. காய்ச்சல், இறுமல், குளிர் இருந்தது. எனது மானேஜருக்கும் இந்த அறிகுறி இருந்தது. இதனால் நாங்கள் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டோம். இப்போது நன்றாக இருக்கிறோம் என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
எஸ்.யாழினி சோமு