முதலமைச்சர் மைத்துனர் இல்ல திருமண ஆல்பம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின். இவரது சகோதரர் மருத்துவர் ஜெய.இராஜமூர்த்தி. இவரது மகன் இரா.சாரங்கராஜன் (எ) சஞ்சய்க்கும் ச.கீர்த்தனாவுக்கும் இன்று சென்னை அறிவாலயத்தில் திருமணம் நடந்தது.
திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். அவரது மனைவி துர்கா ஸ்டாலின் இவர்களது மகனும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவரது மனைவி கிருத்திகா உதயநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
மேலும் பல அரசியல் மற்றும் திரை பிரபலங்களும் நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமண போட்டோ ஆல்பம்: