பன் பட்டர் ஜாம்: திரை விமர்சனம்

பன் பட்டர் ஜாம்: திரை விமர்சனம்

“ப்ரெண்ட், பெஸ்டி, லவ்வர்” என்று ஆங்கிலத்தில் சொல்வது தற்கால வழக்கமாக இருக்கலாம்.  ஆனால் இது உலகின் அனைத்து பகுதிகளிலும் காலம் காலமாய் இருப்பதுதான். இதை ஏதோ இன்றைய இளைஞர்கள்தான் கண்டுபிடித்ததாக நினைத்து,  நிறைய பேர் படம் எடுக்கிறார்கள். அப்படி வந்திருக்கும் படங்களில் ஒன்றுதான் பன் பட்டர் ஜாம்.

சரண்யா பொன்வண்ணன்,  தேவதர்ஷினிஇருவரும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசிக்கிறார்கள். “நம்ம பையனும், பொண்ணும் ப்ளஸ் டூ முடிச்சு காலேஜுக்கு போறாங்க. அங்க யாரோடயாவது காதல் வந்திரக்கூடாது. அதனால் அவங்களுக்குள்ள நல்லா பழக வச்சு லவ் பண்ண வச்சிருவோம். அவங்களுக்கு இது லவ் மேரேஜ். நம்மைப் பொறுத்தவரை அரேஞ்ச்டு மேரேஜ்” என் பேசி வைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள்.

ஆனால் பையனும் பண்ணும் வேறு பையன், பெண்ணை காதலிக்கிறார்கள். அதன் பிறகு என்ன ஆனது என்பதுதான் கதை.

பையன் – நாயகனாக – வருபவர், பிக்பாஸ் சீசன் 5 வின்னர் ராஜூ.  அப்பாவிதனமாக பேசுவது,  நண்பன் மீது வைத்திருக்கும் பாசம்,  காதலியின் அதிரடி முடிவை அடுத்து செய்யும் சோக சேட்டைகள் என ரசிக்க வைக்கிறார்.

அவரது நண்பனாக வரும் மைக்கேலும் சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார். உயிர் நண்பனை விட்டு ஒதுங்கிப்போவது, அதற்கான காரணத்தைச் சொல்லும்போது வெளிப்டுத்தும் உணர்வு என கவனிக்க வைக்கிறார்.

பவ்யா, ஆதியா  இரு நாயகிகளும் ரசிக்க வைக்கிறார்கள். காதல், குறும்பு என இந்தக்கால இளம் பெண்களை கண் முன் நிறுத்துகிறார்கள்.நாயகனின் அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணனும், நாயகியின் அம்மாவாக வரும் தேவதர்ஷினியும் தங்கள் பிள்ளைகளுக்குள் காதல் வந்துவிட வேண்டுமென்று செய்யும் ஐடியாக்கள் ரசிக்க, சிரிக்க வைக்கின்றன.    நாயகனின் அப்பாவாக வரும் சார்லி  வழக்கம்போல் சிறப்பாக நடித்து உள்ளார்.  பப்பு நகைச்சுவை காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.  விக்ராந்த் கவுரவ தோற்றத்தில் வருகிறார்.

நிவாஸ் கே பிரசன்னாவின் இசை,  பாபு குமாரின் ஒளிப்பதி ஆகியவை படத்துடன் ஒன்ற வைக்கின்றன.

காதல், காமெடி, இளமைத்துள்ளல் என ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குநர்  ராகவ் மிர்தத் . அதே நேரம்,  ராகிங் காட்சி,  கிரிக்கெட் மட்டையுடன் அடிக்கிற வருகிற  காட்சிகள் போன்றவை பார்த்து பார்த்து போரடிக்க ஆரம்பித்துவிட்டன. தவிர,  டிஷ்யூ பேப்பர் சீன் தேவையா என்ற கேள்வியும் எழுகிறது.

அது மட்டுமல்ல.. படம் முழுக்க சிகெரெட் பிடிக்கும் காட்சிகள்…  அவையும் ஒரு கதாபாத்திரமாகவே மாறிவிட்டன. குறைத்திருக்கலாம்.  தவிர,  அப்பாவும் மகனும் சேர்ந்து சிகெரெட் புகைப்பது ஓவர்.  இதுதான் இளைமைக் காட்சி என நினைத்துக்கொள்கிறார்கள் பலர். தவிர்த்திருக்கலாம்.

“ப்ரெண்ட், பெஸ்டி, லவ்வர்” என்று ஆங்கிலத்தில் சொல்வது தற்கால வழக்கமாக இருக்கலாம்.  ஆனால் இது உலகின் அனைத்து பகுதிகளிலும் காலம் காலமாய் இருப்பதுதான். இதை ஏதோ இன்றைய இளைஞர்கள்தான் கண்டுபிடித்ததாக நினைத்து,  நிறைய பேர் படம் எடுக்கிறார்கள். அப்படி வந்திருக்கும் படங்களில் ஒன்றுதான் பன் பட்டர் ஜாம்.

 

 

Related Posts