’சட்டமும் நீதியும்’ இணையத் தொடர் விமர்சனம்
சட்டம் படித்திருந்தாலும் வழக்கெடுத்து நீதிமன்றத்தில் பணியாற்றாமல், நோட்டரியாக புகார்களை டைப் செய்து கொடுக்கும் பணி செய்து வருகிறார் வழக்கறிஞர் சரவணன். அவரிடம் உதவியாளராக சேர நம்ரிதா முயற்சிக்கிறார். “நீதிமன்றத்தின் வெளியே உட்கார்ந்திருக்கும் தன்னிடம் உதவியாளராக சேர வேண்டாம்” என்கிறார் சரவணன்.
அவரை, “டைப் அடிக்கும் வழக்கறிஞர்” என நீதி மன்றத்தில் பலர் கிண்டலடிக்கின்றனர். பெற்ற மகனும், மகளுமே குத்திக்காட்டுகின்றனர். அவரது ஆலோசனை இல்லாமலேயே மகளின் திருமணத்தைத் தீர்மானிக்கிறார் மனைவி.
தன்னை நிரூபிக்க வெகுண்டெழுகிறார் சரவணன்.
சில நாட்களுக்கு முன், ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து மரணமடைகிறார். அது குறித்து பொது நல வழக்கு தொடுத்து ஆஜராகிறார் சரவணன்.
வழக்கறிஞர் என்பதோடு, துப்பறியும் நிபுணராகவும் களம் இறங்குகிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை சுவாரஸ்யமான இன்த வெப் தொடர்.
வழக்கறிஞராக நவரும் சரவணன், மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தன்னை பிறர் அவமானப்படுத்தும் போது குமைந்து போவது, தனது சட்ட அறிவை எதார்த்தமாக வெளிப்படுத்துவது என ஜமாய்த்திருக்கிறஆர் சரவணன். அவரது பேச்சு, உடல் மொழி அனைத்தும் சிறப்பு.
அவரது உதவியாளராக வரும் நம்ரிதாவும் சிறப்பாக நடித்து உள்ளார். அநீதியை எதிர்த்து கோபம் கொள்வது, வழக்கில் தொய்வு அடையும்போது சோர்ந்து நிற்பது என கவர்கிறார்.
இதர வேடத்தில் நடித்திருக்கும் அருள் டி.சங்கர், சண்முகம், திருச்செல்வம், விஜய்ஸ்ரீ, இனியா ராம் உள்ளிட்ட அனைவருமே சிறப்பாக நடித்து உள்ளனர்.
ஒளிப்பதிவாளர் எஸ்.கோகுல்கிருஷ்ணன் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். நீதிமன்ற வளாகம், நீதிமன்றம் என்றே பெரும்பாலான காட்சிகள் இருந்தாலும் அலுப்பு ஏற்படாத வண்ணம் பல்வேறு கோணங்களில் காட்சிகளை அளித்து இருக்கிறார்.
விபின் பாஸ்கர் இசையில், பாடல்கள் மற்றும் பின்னணி இரண்டுமே கவர்கின்றன.
வழக்கமான ஓ.டி.டி. தொடராக இல்லாமல் சட்டம் குறித்த தொடர்.. அதோடு சீரான வேகம் என கவர்கிறது, சட்டமும் நீதியும்.
கதையாசிரியர் சூர்யபிரதாப்.எஸ் பாராட்டுக்கு உரியவர்.
சுவாரஸ்யமாக இயக்கியபாலாஜி செல்வராஜ் கவர்கிறார்.
அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய தொடர்.
விலங்கு, அயலி, கூசே முனுசாமி வீரப்பன், ஐந்தாம் வேதம் போன்ற பல அதிரடி வெப் தொடர்களை அளித்த மீண்டும் ஒரு அதிரடி தொடரை அளித்துள்ளது.
இன்று ( ஜூலை 18) தேதி முதல் ZEE5 ஓ.டி.டி.யில் கண்டு ரசிக்கலாம்.
ரேட்டிங்: 3.4/5

