brother: “நான்தான் தலைப்பு வைத்தேன்!”: ஜெயம் ரவி மகிழ்ச்சி!

brother: “நான்தான் தலைப்பு வைத்தேன்!”: ஜெயம் ரவி மகிழ்ச்சி!

ஸ்கிரீன் சினி நிறுவனம் சார்பில் சுந்தர் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில், ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ல படம் ‘பிரதர்’. ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.நிகழ்ச்சியில் நடிகர் ஜெயம் ரவி பேசுகையில், “நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நீங்கள் எப்போதும் எனக்கு கொடுக்கும் ஆதரவையும் உற்சாகத்தையும் என்னுடைய கடைசி படம் வரைக்கும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். “மக்காமிஷி” பாடல் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் இந்த பாடலை கேட்பதற்கு முன்பு, சாண்டி மாஸ்டர் என்னை நடன ஒத்திகைக்கு அழைத்தார். அப்போது என்னுடன் என் மகன் ஆரவும் வந்திருந்தார். அப்போது இந்த பாடலில் வரும் முட்டி போட்டு ஆடும் ஒரு ஸ்டேப் எனக்கு வரவில்லை, அப்போது என் மகன் என்னை பார்த்து “என்னப்பா வயசாயிடுச்சா” என்றான். என்னால் அது தாங்க முடியவில்லை. நான் எனக்கு இரண்டு நாள் அவகாசம் கொடு என்று கேட்டு நன்கு பயிற்சி செய்து ஆடினேன். அதை கண்டதும் எனக்கு கை கொடுத்து “you did இட்” என்றான்.

எப்போதுமே உங்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்த தான் என்னுடைய முதல் படத்திலிருந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் அனைவரின் ஆதரவுக்கு நன்றி. மீடியா எப்போதும் என்னை ஒரு குழந்தை போன்று நான் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ள சொல்வதும், நான் செய்யும் ஒவ்வொன்றையும் அவர்கள் கவனிப்பதும் தான் என்னுடைய வளர்ச்சிக்கு காரணம், வேறு எதுவும் கிடையாது. ராஜேஷ் சார் அவர் என்னுடைய “brother” தான். நான் தான் “brother” என்ற டைட்டில் கொடுத்தேன். நீங்கள் சொல்லுவீர்கள் என்று நினைத்தேன், ஆனால் நீங்கள் சொல்லவில்லை. உங்களின் அடுத்த படத்திற்கும் டைட்டிலை நான் தருகிறேன். இந்த படம் ஒரு குடும்பப்படம் என்பதால் நிறைய பெயர்கள் வைக்க முயற்சி செய்தோம். “பூங்காவனம்” அப்படி இப்படி என்று என்ன என்னமோ பெயர்கள் வைக்க நினைத்தோம். ஹீரோயிசமாக ஒரு டைட்டில் வைக்கலாம் என்று நினைத்தால்,  இப்படம் ஒரு பேமிலி என்டர்டெயினர் என்று பேசிக்கொண்டிருக்கும் போது,  “என்னதான் வைக்கிறது பிரதர்” என்றார்.
சார் இந்த டைட்டில் நன்றாக உள்ளது என்றேன், “என்னதான் வைக்கிறது பிரதர்” என்பதை டைட்டிலாக எப்படி வைக்க முடியும் என்றார். நான் “BROTHER” தான் டைட்டில் என்றேன். ஏனென்றால் எங்கள் டீமில் சுந்தர் சார், ராஜேஷ் சார் என அனைவரும் ஒருவரை ஒருவர் “BROTHER” என்று தான் அழைத்துக் கொள்வோம். அதனால் இந்த டைட்டில் சரியாக இருக்கும் என்று அவர் டீமில் கேட்ட அனைவரும் ஓகே சொல்லிவிட்டார்கள். இது ஒரு அக்காவுக்கும் தம்பிக்குமான ஒரு அழகிய கதை தான் இப்படம்.

அந்த கதையை விட அழகாக இருக்கும் அக்கா நம் பூமிகா அக்கா, பல வருடங்களாக நாம் அவரை பார்த்து வருகிறோம், ஒரு முறை கூட அலுக்காத ஒரு முகம் அவர்களின் முகம். நான் என் நண்பர்களிடம் பூமிகா மேடம் எனக்கு அக்காவாக நடிக்க போகிறார்கள் என்று சொன்னதும் அனைவரும் என்னுடன் சண்டை போட்டார்கள், யார் அக்கா? அவர்களை நீ எப்படி அக்காவாக நடிக்க வைக்க முடியும்? என்று கேட்டார்கள்.

அதே போல் தான் எம்.குமரன் படத்தில் நதியா மேடம் எனக்கு அம்மாவாக நடிக்கிறார்கள் என்றபோது பயங்கரமாக என்னை கத்தினார்கள்.பூமிகா மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள், அவர்களுடன் நடித்த அனுபவம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது, நன்றி பூமிகா மேடம்.

ராஜேஷ் சார் என் குடும்பத்தில் ஒருவராக தான் இருக்கிறார், அவரை சந்தித்த போது என்னிடம் இரண்டு மூன்று லைன்களை சொல்லியிருந்தார். நான் அப்போது எனக்கு முழு காமெடி படமாக இல்லாமல், ஒரு பேமிலி என்டேர்டைனர் படமாக வேண்டும் என்று கேட்டேன் அப்போது தான் இந்த படத்தின் லைன் சொல்லியிருந்தார். அதன் பின் அதை முழுமை படுத்தி என்னிடம் எடுத்து வந்தார், அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
நாம் அனைவரும் அவரை ஒரு காமெடி படம் எடுக்கும் இயக்குனர் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அவரின் “சிவா மனசுல சக்தி” படத்தின் கதையை பார்த்தல் அது ஒரு எமோஷனல் ட்ராமா மற்றும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட ஒரு படமாக இருக்கும். அதை அவ்வளவு நேர்த்தியான ஒரு படமாக எடுத்திருப்பார். அந்த படத்தில் “மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்” என்ற வசனம் பிரபலமானதால் நாம் இன்றும் அதை மீம்மாக உபயோகித்து வருகிறோம்.

அதே போல் “பாஸ் என்கிற பாஸ்கரன்” படத்தில் ஒரு மனிதன் படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி வரையிலும் ஒரே மாதிரி தான் இருப்பர், அவர் மாறவே மாட்டார். அது மிகவும் புதுமையாகவும் சிறப்பாகவும் இருந்தது எனக்கு பிடித்திருந்தது. இந்தப் படமும் அதே போல் தான் ஒரு கதாபாத்திரத்தை மையமாக கொண்டு கதையமைத்துள்ளார். அதனால் இப்படமும் சிறப்பாக வரும் என்று நம்பிக்கையில் இப்படத்தில் நடித்துள்ளேன், என்றார்.

Related Posts