திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கைது?

திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கைது?

திரைப்பட இயக்குநர் மோகன்ஜி கைது செய்யப்பட்டு உள்ளதாக  தகவல் பரவியது. இந்நிலையில், அரசியல் பிரமுகர் அஸ்வத்தாமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

பழைய வண்ணாரப்பேட்டை திரைப்பட்டத்தை இயக்கி, திரையுலகில் கால் பதித்தவர் மோகன்ஜி. தொடர்ந்து திரௌபதி, ருத்ரதாண்டவம், பகாசுரன் ஆகிய படங்களை இயக்கினார்.

திரவுபதி, ருத்ரதாண்டவம் ஆகிய திரைப்படங்கள் சாதி ஆதிக்கத்தை முன்னிலைப்படுத்துவதாக  இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. பகாசுரன் படத்தில் அது போன்ற காட்சிகள் இல்லாவிட்டாலும்,  மோகன் ஜியின் முந்தையை படங்களை மனதில் வைத்து,  இந்தப் படத்தையும் சாதி ரீதியிலானது என சிலர் விமர்சித்தனர்.

இதற்கிடையே மேடைகளிலும், தனது சமூகவலைதள பக்கங்களில் அதிரடியான கருத்துக்களை தெரிவிப்பது மோகன்ஜியின் வழக்கம்.

சமீபத்தில்கூட, ஆன்மிக பேச்சாளர் சுகிசிவம் அவர்களை, சம்ஹாரம் செய்ய வேண்டும் என மோகன் ஜி பேசியதும்  சர்ச்சையானது.

இந்நிலையில்தான் அரசியல் பிரமுகர் அஸ்வத்தாமன், தனது எக்ஸ் தள பக்கத்தில்,”  சினிமா இயக்குனர் நண்பர் திரௌபதி  அவர்கள் சற்று முன் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

என்ன காரணம், எந்த வழக்கு என்று எந்த முறைப்படியான தகவலும் குடும்பத்தினருக்கு கூறப்படவில்லை. இது உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிரானது. அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார்” என்று தெரியவில்லை” என்று குறிப்பிட்டு உள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

Related Posts