இறுதிக்கட்ட பணிகளில் ஜெய், சத்யராஜ், யோகிபாபு இணைந்து நடிக்கும், பேபி & பேபி !!

இறுதிக்கட்ட பணிகளில் ஜெய், சத்யராஜ், யோகிபாபு இணைந்து நடிக்கும், பேபி & பேபி !!

GPS Creations சார்பில் G.P. செல்வகுமார் தயாரிப்பில், Yuvaraj Films சார்பில் B. யுவராஜ், வெளியிட, நடிகர்கள் ஜெய், சத்யராஜ், யோகி பாபு நடிப்பில், அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில், அழகான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் பேபி & பேபி.

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் குடும்பங்களோடு இணைந்து ரசிக்கும் படங்கள் வருவது அரிதாகிவிட்டது. அந்த வகையில் குடும்ப உறவுகளின் பின்னணியில், குழந்தைகளை மையப்படுத்தி, அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. காமெடியும், எமோஷனும் சம அளவில் கலந்து ஒரு அசத்தலான ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் பிரதாப்.இப்படத்தில் ஜெய் நாயகனாக நடிக்க, நடிகர் சத்யராஜ் திருப்புமுனை பாத்திரத்தில் நடிக்கிறார். யோகிபாபு மிக முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். நாளை தீர்ப்பு படத்தில், விஜய்யின் முதல் கதாநாயகியாகவும் மற்றும் பவித்ரா படத்தில் அஜித்தின் ஜோடியாகவும் நடித்த, நடிகை கீர்த்தனா செல்வகுமார் இப்படத்தில் ஜெய்யின் அம்மாவாகவும், நடிகர் சத்யராஜுக்கு ஜோடியாக மீண்டும் திரையில் களமிறங்கியுள்ளார். நடிகை பிரக்யா நாக்ரா ஜெய் ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்தராஜ், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, இளவரசு, சிங்கம்புலி, நிழல்கள் ரவி, கேபிஒய் ராமர், கேபிஒய் தங்கதுரை, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், சேசு ஆகியோர் இணைந்து நடிக்கின்றார்கள். மற்றொரு நாயகியாக புதுமுகம் சாய் தன்யா நடிக்கிறார்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னை சுற்று வட்டார பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் படமாக்கப்பட்டு வருகிறது.

GPS Creations சார்பில் G.P. செல்வகுமார் பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் D இமான் இசையமைக்கிறார். T.P. சாரதி ஒளிப்பதிவு செய்கிறார். Yuvaraj Films சார்பில் B. யுவராஜ், தயாரிப்பாளர் G.P. செல்வகுமார் இணைந்து இப்படத்தை வெளியிடுகிறார்கள். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.

தொழில் நுட்ப குழு
இயக்கம் – பிரதாப்
இசை – D. இமான்
ஒளிப்பதிவு – T.P. சாரதி
எடிட்டர் – K ஆனந்தலிங்ககுமார்

Related Posts