சீமான் தாயாருக்கு பகிரங்கக் கடிதம்!
தந்தை பெரியார் குறித்து இழிவாக சீமான் பேசியது அதிர்ச்சியை அளித்து உள்ளது. இந்த நிலையில் சீமான் தாயார் அன்னம்மாள் அவர்களுக்கு, பத்திரிகையாளர் டி.வி.சோமு, தனது முகநூல் பக்கத்தில் பகிரங்க கடிதம் எழுதி உள்ளார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த கடிதம்…
“அன்புள்ள அன்னம்மாள் அம்மாவுக்கு, சோமு எழுதுவது.
உங்களை நான் பார்த்ததில்லை… போனில்கூட பேசியதில்லை.
ஆனாலும் என்ன.. நீங்களும் எனக்கு அம்மாதான்.
உங்கள் மகன், தனது பெயரை சீமான் என்று மாற்றிக்கொண்டதை அறிவீர்கள் என நினைக்கிறேன். ஆகவே அப்படியே குறிப்பிடுகிறேன்.
பத்திரிகையாளன் என்கிற முறையில், சீமானை ஐந்தாறு முறை தனி பேட்டிகள் எடுத்துள்ளேன். கடைசியாக பேட்டி எடுத்து ஏழு வருடங்கள் இருக்கும்.
அப்போதெல்லாம் சீமான், இத்தனை மோசம் இல்லை.
நாளாக, ஆக சீமானின் பேச்சுக்கள் இழிவாகப் போய்க்கொண்டே இருக்கின்றன.
இன்று பேசியது இழிவின் உச்சம்…
சொல்வதற்குக் கூச்சமாக இருக்கிறது.. ஆனால் சொல்லித்தான் ஆகவேண்டும் அம்மா!
“ஆசை வந்தால் தாய், சகோதரியிடம்கூட தீர்த்துக்கொள் என்று பெரியார் கூறினார்” என்று சீமான் சொன்னது பெரும் அதிர்ச்சி…
பெரியார் அப்படிச் சொல்லவில்லை.
அப்படியானால் என்ன அர்த்தம் என புரிகிறது அல்லவா உங்களுக்கு?
இந்த கேடுகெட்ட எண்ணம் உதித்திருப்பது சீமானின் மூளையில்தான்!
அப்படியானால் சீமானின் பார்வை, தனது குடும்பத்து பெண்களின் மீது எப்படி இருக்கும் என்பது புரிகிறதா அம்மா? இரணடு சகோதரிகளும் இருக்கிறார்கள்!
பெற்ற பிள்ளையின் மரணத்தைவிட ஒரு தாய்க்கு கொடுமையான விசயம், “இப்படியோர் பிள்ளையை ஏன்தான் பெற்றாயோ” என்கிற கேள்விதான்.
அப்படியோர் கேள்வியை உங்களை நோக்கி கேட்க வைத்ததுதான் சீமான் செய்த காரியம்…
அன்பும் அக்கறையுடன்,
– டி.வி.சோமு”
