’ஆதிபுருஷ்’ டீசர் வெளியீடு! மனம் திறந்த பிரபாஸ்

பிரம்மாண்ட நாயகன் பிரபாஸ் ’ஆதிபுருஷ்’ பற்றி கூறியிருக்கிறார். ‘ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சவால்கள் நிறைந்தது, ஆனால் இது போன்ற ஒரு கதாபாத்திரத்தை திரையில் கொண்டுவருவது மிகவும் பொறுப்புமிக்கது மற்றும் பெருமைக்குரியது. இயக்குநர் ஓம் விசேஷமாக வடிவமைத்துள்ள இந்த காவிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நான் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். நம் நாட்டின் இளைஞர்கள் தங்கள் அன்பை இப்படத்திற்கு கொடுப்பார்கள் என்று நம்புவதாக கூறியிருக்கிறார்.

 ‘இப்படம் என் இதயத்துக்கு நெருக்கமானதாகும்.  நாங்கள் தயாரிக்கும் எல்லா படங்களும் எங்களோடு உணர்வுரீதியாக இணைந்திருக்கின்றன  என்று பூஷன் குமார் கூறினார். ஆனால் ஓம் ஆதிபுருஷ் படத்தின் கதையை என்னிடம் கூறும்போது, ‘இந்த கனவு திட்டத்தில் பணியாற்றும் சந்தர்ப்பத்தை இழக்கக் கூடாது என்று தோன்றியது. இந்த பிரம்மாண்ட படத்தின் நானும் ஒரு அங்கமாக இருக்கப் போகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 இந்த படத்தில் நடிக்கவும் என்னுடைய நோக்கத்தையும் ஒப்புக்கொண்ட பிரபாஸுக்கும், என்னுடைய கனவு திரைப்படத்தை வெளியிட நிபந்தனையற்ற ஆதரவையும் வழங்கிய பூஷன் அவர்களுக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். மிகப்பெரிய கனவுகளோடும், பெருமிதத்தோடும்,  இதற்கு முன் பார்த்திராத ஒரு அனுபவத்தை பார்வையாளர்களுக்கு தரும் உறுதியோடும் இந்த பயணத்தை தொடங்குகிறோம்’ என்றார்.

இப்படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் 2021ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 2022ஆம் ஆண்டு பிரம்மாண்ட முறையில் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறுயிருக்கிறார். இந்த படத்தின் பிரம்மாண்டத்தை 2022ஆம் ஆண்டு  எதிர்பார்க்கலாம்.

யாழினி சோமு

Related Posts