’ஆதிபுருஷ்’ 3டி படத்தில் பிரபாஸ்..!
பாகுபலி திரைப்படதின் மூலம் பிரம்பாண்டத்தைக் காட்டிய நடிகர் பிரபாஸ். ரெட்ரோஃபைல்ஸ் புரொடக்ஷன் நிறுவனரும் தன்ஹாஜி திரைப்படத்தின் இயக்குநருமான ஓம் ராவத், ’ஆதிபுருஷ்’ என்ற 3டி படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கு அற்புதமான காட்சி வடிவமைப்பு, ஆக்ஷன்,கிராபிக்ஸ் என அசத்தவுள்ளதாக கூறுகிறார். அவரது கற்பனைகாட்சிகளை திரையில் பிரம்பாண்டமாக கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார் பூஷன் குமார். பாகுபலி திரைப்படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு இந்த காவிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் பிரபாஸ். இந்த திரைப்படம் பாகுபலியை விடவும் பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கலாச்சாரத்தின் மிகப் பிரபலமான அத்தியாயத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த பிரம்மாணட படைப்பு இந்தி மற்றும் தெலுங்கில் படமாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்த படம் 3டி வடிவில் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் பல வெளிநாட்டு மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவிருப்பதாக தகவல்.
இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட்டின் பிரபல நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கான அறிவிப்பை மிக விரைவில் எதிர்பார்க்கலாம் என்கிறது படகுழு.
யாழினி சோமு