கொரோனா நோயாளிக்கு சிகிச்சை கொடுத்த நடிகை! மருத்துவமனையில்அனுமதி

மும்பை: கொரோனா பெரும் தொற்று மக்களை அச்சுருத்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் மும்பையைச் சேர்ந்த நடிகை ஒருவருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது.  இவர்  கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 6 மாதங்களுக்கு முன்பு நர்சாக மாறினார் எனபது குறிப்பிடதக்கது.

 மும்பையைச் சேர்ந்த  நடிகை ஷிகா மல்கோத்ரா தான்  நர்சாக மாறினார்.  தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.  கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

 ஊரடங்கு, மருத்து சேவை, கட்டுபாடுகள் என்று அரசாங்கத்தால் விதிக்கப்பட்டாலும் இந்த தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. இதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும்  உயர்ந்து வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இந்த தொற்று கடந்த ஏப்ரல் மாதம் அதிதீவிரமாக பரவியபோது மருத்துவச் சேவையில் தன்னார்வலர்கள் இணைந்து கொள்ளலாம் என அரசு கோரிக்கை விடுத்தது.

இதில் நடிகை ஷிகா மல்ஹோத்ரா தானாக முன்வந்து கொரோனா நோயாளிகளுக்கு  நர்சாக உதவினர். இவர் இந்தியில் காஞ்ச்லி லைஃப் இன் எ ஸ்லாஹ் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர். நர்ஸிங் பட்டப்படிப்பு முடித்த ஷிகா மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பிரிவில் தன்னார்வ நர்சாக பணியாற்ற முன்வந்தார்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது நடிகை என்றும் பாராமல் தான் படித்த படிப்பால் நோயாளிகளுக்கு உதவ முன்வந்தார். ஷிகா அவரது அம்மாவும்  ஒரு நர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரிந்து வந்த நடிகை ஷிகா, தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ஆக்சிஜன் அளவு குறையத் தொடங்கியதால் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது ரசிகர்களுக்கு கொரோனா என்பது பெரிய விஷயம் அல்ல’ கடந்த 6 மாதமாக உங்கள் ஆசியுடன் நோயாளிகளுக்கு சேவை செய்துள்ளேன். தற்போது எனக்கு ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என்று தன்னம்பிக்கையுடன் கூறியிருக்கிறார். தனது ரசிகர்களை முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

-யாழினி சோமு

Related Posts