ரசிகர்கள் எதிபார்த்த “மாறா” டிசம்பர் 17 ஓடிடியில் வெளியீடு!
சென்னை; நடிகர் மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் “மாறா” படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பாப்பை ஏற்படுத்திவருகிறது. இந்த நிலையில் நேற்று அக்டோபர் 9ஆம் தேதி வெளியான “மாறா” பட ஃபர்ஸ்ட் லுக், போஸ்டரை பார்த்த ரசிகர்களுக்கு உச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் பெரும் வரவேற்பு படக்குழுவினரை உச்சாகப்படுத்தியுள்ளது. இந்த படம் அமேசான் ப்ரைம் வீடியோ (OTT) தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
இந்தப் படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு தேதியும் நேற்று வெளியானது. இதைப் பார்த்த ரசிகள் கொண்டாடிவருகின்றனர். மனதை மயக்கும் காதல்’ அருமையான காட்சி படுத்துதல் என மிக அழகான அன்பைச் சொல்லும் இப்படமாக அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் டிசம்பர் 17 அன்று வெளியாகிறது.
முன்னணி கதாபாத்திரங்கள் இருவரும், மனதை கவரும் தோற்றத்தில், போஸ்டரின் வேறு வேறு பக்கங்களில் இருக்க, போஸ்டரில் இருவேறு களங்கள் காட்சியளிக்கிறது. ஒரு கடற்கரை பகுதி மற்றும் ஒரு மலைப்பகுதி அதில் எதையோ தேடி நடக்கும் ஒரு பெண் என கதையின் மையத்தை அழகான ஓவியமாக கொண்டிருக்கிறது போஸ்டர்.
நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற “கல்கி” படத்தினை உருவாக்கி புகழ்பெற்ற திலீப் குமார் இப்படத்தை இயக்குகிறார். பிபின் ரகுவுடன் இணைந்து திலீப் குமார் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான்.
அந்த வகையில் “மாறா” படக்குழு இப்படத்தில் ஜிப்ரானின் இசை, இசைக்காதலர்களுக்கு பெரு விருந்தாக அமையும் என்கின்றனர். இப்படத்தின் பாடகளின் வரிகளை அழகாக கோர்த்திருக்கிறார் கவிஞர் தாமரை.
ஒளிப்பதிவாளர்கள் கார்த்திக் முத்துகுமார், தினேஷ் கிருஷ்ணன் B மற்றும் கலை இயக்குனர் அஜயன் ஜலிசரி கண்டிப்பாக இப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெறுவார்கள் எனபதில் எந்த மாற்றமும் இல்லை என்றே கூறலாம்.
-யாழினி சோமு