ராஜா சார் இசை… மதுரை கெத்து… டோரதி மேடையில் கார்த்திக் சுப்புராஜ் டீம் அதிரடி!
ஜியோ ஸ்டுடியோஸ் வழங்க, சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ‘டோரதி’ திரைப்படம் செப்டம்பர் 25 அன்று திரைக்கு வரப்போகிறது. இதையொட்டி நடந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் படக்குழுவினர் பகிர்ந்த சுவாரஸ்யமான பேச்சுக்கள்…
முத்துப்பாண்டி பேசும்போது, “இது என்னோட முதல் மேடை! வாய்ப்பு கொடுத்த கார்த்திக் சாருக்கு ரொம்ப நன்றி. ராஜா சார் இசையில வர்ற வரிகளின் மீனாட்சியா, இந்தப் படத்துக்கு வழித்துணையா இருந்த கீர்த்தி சுரேஷ் மேமுக்கு பெரிய நன்றி” எனத் நெகிழ்ந்தார்.
செளந்தரராஜன், “கார்த்திக் சுப்புராஜை ஷார்ட் ஃபிலிம் காலத்திலிருந்தே தெரியும். மதுரையையும் அந்த மண்ணின் மனிதர்களையும் உயிர் மூச்சா நேசிக்கிறவர். ‘டோரதி’ படத்துல எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. சனந்த், ரிஷி ரெண்டு பேரோட வளர்ச்சியைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. கீர்த்தி சுரேஷ் முழுக்க முழுக்க இயக்குநரோட நடிகை” என்று வாழ்த்தினார்.
கலை இயக்குநர் குமார், “திண்டுக்கல், மதுரையில லொகேஷன் பார்த்துப் பார்த்து சவாலா வேலை செஞ்சிருக்கோம். விஷூவலா படம் வேற லெவல்ல இருக்கும். கண்டிப்பா படம் செம ஹிட் அடிக்கும்” என்றார்.
நடிகை ஜீவா, “முதன்முறையாக என்னை உலக மேடைக்கு அழைத்துச் சென்றது இந்த ‘டோரதி’ தான். தமிழ்நாட்டிலிருந்து முதல்முறையாக ஒரு திருநங்கை டொரன்டோ ஃபிலிம் பெஸ்டிவலுக்குப் போனது நான்தான் சொன்னாங்க. ரொம்ப நெகிழ்ந்துட்டேன். இளையராஜா சார் இசையில நடிச்சது என் கனவு நனவான தருணம்” என உருகினார்.
படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா, “ஜிகர்தண்டா பார்த்து சினிமாவுக்கு வந்தவன் நான். இன்னைக்கு கார்த்திக் சுப்புராஜ் சார் படத்துலயே எடிட்டரா வேலை செஞ்சது ஒரு மேஜிக் போல இருக்கு” என்றார்.
நடிகர் முத்துக்குமார், “இந்திய சினிமாவுக்கு ரொம்பவே அவசியமான, தேவையான படம் இது. தியேட்டர்ல பார்த்துட்டுச் சொல்லுங்க” என்றார்.
ரிஷிகாந்த் பேசும்போது, “என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த கார்த்திக் சாருக்கு நன்றி. மதுரை பாஷைக்காக ரெண்டு மாசம் கடுமையான பயிற்சி எடுத்தோம். கீர்த்தி மேமின் நல்ல மனசுக்கு இன்னும் நிறைய விருதுகள் கிடைக்கும். சனந்தும் நானும் நிஜமாவே நல்ல நண்பர்கள். ராஜா சாரின் இசையில் நடிச்சதை நினைச்சா இன்னமும் ஆச்சரியமா இருக்கு” என்றார்.
சனந்த், “டொரன்டோ ஃபிலிம் பெஸ்ட்டிவல்ல படம் பார்த்தவங்க எல்லாரும் கட்டிப்பிடிச்சுப் பாராட்டினப்போ ரொம்ப ஸ்பெஷலா இருந்தது. ராஜா சார் இசையில நடிச்சதோட இல்லாம, அவரோட பாடலுக்கு நடனமாடி, அவரோட சேர்ந்து ஒரு பாட்டுலயும் நடிச்சிருக்கோம்! செப்டம்பர் 25 ரிலீஸ், உங்க ஆதரவு கண்டிப்பா வேணும்” என்றார்.
சக்திவேலன் (சக்தி ஃபிலிம் ஃபேக்டரி), “கார்த்திக் சார் இயக்கம், ராஜா சார் மியூசிக்… இதை மட்டும் நம்பிதான் படம் பார்த்தேன். செம கமர்ஷியல் அனுபவமா இருக்கும். 80-கள்ல ரஜினி – விஜயகாந்த் சேர்ந்து நடிச்சா எப்படி இருக்குமோ, அப்படி இருக்கும் ரிஷி – சனந்த் காம்பினேஷன்!” என எகிற வைத்தார்.
கீர்த்தி சுரேஷ், “கதை கேட்டதுமே உடனே ஓகே சொல்லிட்டேன். கார்த்திக் சாரிடம் நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். ரிஷி, சனந்த் கூட நல்ல பாண்டிங் கிடைச்சது. செப்டம்பர் 25 படம் வருது, உலகளவில் பேசப்படும் படமா இது கண்டிப்பா இருக்கும்” என்றார்.
இறுதியாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “என் சினிமா ரசனைக்குக் காரணமே என் சொந்த ஊரான மதுரை மண்தான். என்னோட படங்கள்லயே எனக்கு ரொம்பப் பிடிச்சது ‘இறைவி’தான். அதைவிடவும் ரொம்ப உணர்வுபூர்வமான கதையா ‘டோரதி’ வந்திருக்கு. ராஜா சார் இசைதான் இந்தப் படத்தோட ஆத்மா. சனந்த், ரிஷி ரெண்டு பேரும் திரையில பின்னியிருக்காங்க. கீர்த்தி சுரேஷோட நடிப்பு படத்துக்குப் பெரிய பலம். இது என்னோட 10-வது படம், எல்லாரும் ஆதரவு கொடுங்க” எனக் கூறி முடித்தார்.

