‘மலம பித்தா பித்தாதே’: எழுத்தாளர் சங்க உறுப்பினர் ஆனார் பாடலாசிரியர் நடிகர் சிவகார்த்திகேயன்!
திரை உலகத்தின் உச்சத்தில் இருந்தாலும், பழகுவதில் எப்போதுமே ‘நம்ம வீட்டுப் பிள்ளை’தான் நடிகர் சிவகார்த்திகேயன்! அவரைத் தேடி வந்திருக்கிறது ஒரு கம்பீரமான மரியாதைச் சந்திப்பு.
எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் திரு. சேரன், பொதுச்செயலாளர் திரு. பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் திரு. சுந்தர்ராஜன், துணைத்தலைவர் திரு. சினேகன் ஆகிய பெரும் தலைகளுடன், செயற்குழு உறுப்பினர்களான இயக்குனர் திரு. செல்வபாரதி, இயக்குனர் திரு. KBB நவீன் ஆகியோர் அடங்கிய பட்டாளமே சிவகார்த்திகேயனை நேரில் போய் சந்தித்திருக்கிறார்கள்.
காரணம்? மரியாதை நிமித்தமாக நலம் விசாரிப்பதோடு, சங்கம் அடுத்து நடத்தவிருக்கும் பிரம்மாண்ட விழாவிற்கு அவரை முறைப்படி அழைக்கத்தான்!
வந்தவர்களை இன்முகத்தோடு வரவேற்ற சிவகார்த்திகேயன், சங்க நிர்வாகிகளின் வேண்டுகோளை அப்படியே தலைமேல் தாங்கி, பாடலாசிரியராகத் தன்னைச் சங்கத்தில் இணைத்துக் கொண்டார். அதுமட்டுமா? “வந்தோம், பேசினோம்” என்று இல்லாமல், எழுத்தாளர்கள் சங்கத்தின் எதிர்காலச் செயல்பாடுகளுக்காகவும், வளர்ச்சிளுக்காகவும் சில செம மாஸான ஆலோசனைகளையும் அள்ளி வீசியிருக்கிறார்!
போதாக் குறைக்கு, “கண்டிப்பா விழாவுக்கு வர்றேன் சார்!” என்று கெத்தாக வாக்குக் கொடுத்து, வந்திருந்த மூத்தப் படைப்பாளிகள் அனைவரையும் வழி அனுப்பி வைத்தார்.
சொன்ன வார்த்தையிலும், காட்டிய மரியாதையிலும் மொத்த நிர்வாகிகளின் மனசையும் அள்ளியிருக்கிறார் சிவகார்த்திகேயன். பூரித்துப் போன எழுத்தாளர்கள் சங்கத்தினர், இந்த நெகிழ்ச்சியான தருணத்தைத் தீவிர மகிழ்ச்சியோடு சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டாடுகிறார்கள்!
கவிஞர் & நடிகர் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்கள்..
-
கல்யாண வயசு – கோலமாவு கோகிலா
-
செல்லம்மா – டாக்டர்
-
சோ பேபி – டாக்டர்
-
அரபிக் குத்து – பீஸ்ட்
-
காண்டகண்ணழகி – நம்ம வீட்டுப் பிள்ளை
-
சும்மா சுர்ர்ர்ருன்னு – எதற்கும் துணிந்தவன்
-
பிரைவேட் பார்ட்டி – டான்
-
எடக்கு மொடக்கு – நாய் சேகர்
-
ஹே போய – கூர்க்கா

