Gen Z காதல் அலையை உருவாக்க வருகிறது ‘ஒன்ஸ் மோர்’!
விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், வரும் ஆகஸ்ட் இருபத்தெட்டாம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. படக்குழுவினர் இதற்கான அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டு, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளனர்.
படத்தின் ஸ்பெஷல்ஸ்..
-
புதிய கூட்டணி: கரடுமுரடான குரலுக்கு சொந்தக்காரரான அர்ஜுன் தாஸ் மற்றும் துறுதுறுப்பான அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடிக்கும் காதல் காவியம்.
-
புதிய முகம்: பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் தடம் பதிக்கிறார்.
-
இசை மேஜிக்: ‘ஹிருதயம்’, ‘குஷி’, ‘ஹாய் நானா’ போன்ற வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த ஹேஷாம் அப்துல் வஹாப், இப்படத்தின் மூலம் தமிழில் காலடி எடுத்து வைக்கிறார்.
-
தொழில்நுட்பக் குழு: அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவிலும், ராஜ் கமல் கலை இயக்கத்திலும், நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பிலும் கைகோர்த்துள்ளனர்.
-
தயாரிப்பு: மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் யுவராஜ் கணேசன் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.
ஏற்கனவே வெளியான டீசர் மற்றும் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஆகஸ்ட் இறுதியில் திரையரங்குகளில் இந்த இளமைத் திருவிழா அரங்கேறவுள்ளது!
