நீட் ரத்து அதிர்ச்சி! ஏ. சற்குணத்தின் ‘எக்ஸாம்’ சீரிஸ்: மிரட்டும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்!

நீட் ரத்து அதிர்ச்சி! ஏ. சற்குணத்தின் ‘எக்ஸாம்’ சீரிஸ்: மிரட்டும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்!

‘கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிவிட்டது’  என்று காரணம் சொல்லி, மே 3ல் நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது.  இது போன்ற தேர்வு முறைகேடுகளைச் சொல்லும் “எக்ஸாம்” வெப் சீரிஸ்., அமேசான் தளத்தில் வரும் 15ம் தேதி வெளியாகிறது. 

டைரக்டர் ஏ. சற்குணத்தின் இந்த அதிரடி வெப் தொடரில்,  ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர், அதிரவைக்கும் செம வெயிட்டான ரோலில் ஸ்கோர் செய்திருக்கிறார்!

முதல் படத்திலேயே மிரட்டிய துரை சுதாகர்!

தன்னுடைய முதல் படமான ‘தப்பாட்டம்’ மூலமே ஒட்டுமொத்த கோலிவுட்டையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். அந்தப் படத்தில் இளநீரில் ஸ்ட்ரா போட்டு, அதைத் தன் காதலியின் வாயிலிருந்து இவர் உறிஞ்சிக் குடிக்கும் சீன் இருக்கிறதே… அது சாதாரண வைரல் இல்லை, விஸ்வரூப வைரல்!எந்த அளவுக்கு என்றால், எக்ஸ் (X) தளத்தின் பாஸ் எலான் மாஸ்க் கண்ணிலேயே அந்தப் புகைப்படம் பட்டிருக்கிறது. அதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அவர், “எப்படியெல்லாம் புத்திசாலித்தனமாகச் சிந்திக்கிறார்கள்!” (How intelligence works) என வியந்து பாராட்டித் தன் பக்கத்திலேயே ஷேர் செய்தார். அந்த ஒரே ஒரு மேட்டர், சுதாகரை உலக அளவில் டிரெண்ட் ஆக்கியது!

வில்லத்தனத்திலும் கிங்!

அடுத்து ‘களவாணி 2’ படத்தில் அதிரடி வில்லனாக எண்ட்ரி கொடுத்து, தன் இயல்பான நடிப்பால் ரசிகர்களை மிரளவைத்தார். பின்னர் ‘பட்டத்து அரசன்’, ‘டேனி’ எனத் தொடர்ந்து ஹிட் அடித்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிவிட்டார்.

எதிர்பார்ப்பில் ‘எக்ஸாம்’!

இப்போது சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எக்ஸாம்’ தொடரில், கதையின் போக்கையே தலைகீழாக மாற்றும் படு சஸ்பென்ஸான கேரக்டரில் பின்னியெடுத்துள்ளார் சுதாகர். புஷ்கர் – காயத்ரியின் ‘வால்வாட்சர் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில், துஷாரா விஜயன் லீட் ரோலில் நடிக்க, அப்பாஸ் மற்றும் அதிதி பாலன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.கதையில் ட்விஸ்ட் கொடுக்கும் அந்த ‘பவர்ஃபுல்’ ரோலில் துரை சுதாகர் இருப்பதால், 15-ம் தேதி வெளியாகவுள்ள இந்தத் தொடர் மீது இப்போதே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது!

Related Posts