போர் பதற்றம்: தள்ளிப்போன யாஷின் ‘டாக்ஸிக்’!
யாஷ் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த ‘டாக்ஸிக்’ (Toxic: A Fairy Tale for Grown-ups) படத்தின் ரிலீஸ் தேதியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது! முதலில் மார்ச் 19-ல் வெளியாவதாக இருந்த இந்தப் படம், தற்போது 2026 ஜூன் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் (Gulf Countries) நிலவும் அசாதாரணச் சூழல் மற்றும் போர் பதற்றம் காரணமாக, அங்குள்ள தியேட்டர்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்திற்கு வளைகுடா நாடுகள் மிக முக்கியமான பிசினஸ் மார்க்கெட் என்பதால், விநியோகஸ்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க தயாரிப்பு நிறுவனங்களான KVN மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் இந்த கடினமான முடிவை எடுத்துள்ளன.
நிறுத்தப்பட்ட கொண்டாட்டங்கள்: மார்ச் 2-ல் வெளியாகவிருந்த ‘தபாஹி’ (Tabahi) பாடல் மற்றும் மார்ச் 8-ல் பெங்களூரில் நடக்கவிருந்த பிரம்மாண்ட டிரெய்லர் வெளியீட்டு விழா என அனைத்து புரமோஷன் வேலைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யாஷ் உடன் நயன்தாரா, கியாரா அத்வானி எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்தப் படம், கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் நேரடியாக உருவாகி, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் ஜூன் 4 முதல் உலகெங்கும் அதிரடிக்கக் காத்திருக்கிறது!

