‘ரை ரை ரா ரா’: ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள் 46 மில்லியன் பார்வைகளுடன் சாதனை!
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் ஸ்கிரீனில் இறங்கினால் அந்த இடமே ‘ரிதம்’ மயமாகிவிடும் என்பதற்கு ‘பெத்தி’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ஒரு சாட்சி! முதல் பாடலான ‘சிக்கிரி சிக்கிரி’ ஏற்படுத்திய அலையை விட, தற்போது வெளியாகியுள்ள ‘ரை ரை ரா ரா’ பாடல் சுனாமி வேகத்தில் சாதனைகளைப் படைத்து வருகிறது.
வெளியான 24 மணி நேரத்திற்குள் 5 மொழிகளிலும் சேர்த்து 46.1 மில்லியன் பார்வைகளையும், 8 லட்சம் லைக்குகளையும் அள்ளிப் போட்டு சோஷியல் மீடியாவை அதிர வைத்துள்ளது இந்தப் பாடல். குறிப்பாக தெலுங்கில் மட்டும் 29.21 மில்லியன் வியூஸ் பெற்று, தனது முந்தைய பாடலின் சாதனையைத் தானே முறியடித்துள்ளார் ராம் சரண்!
ஏ.ஆர். ரஹ்மானின் ‘மின்னல்’ இசை: ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் பாடலுக்குக் கொடுத்திருக்கும் அதிரடியான பீட்ஸ் மற்றும் அவரது வசீகரக் குரல் பாடலின் தரத்தை வேற லெவலுக்குக் கொண்டு சென்றுள்ளது. தமிழில் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள ஆழமான வரிகள் பாடலுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.
ஜானி மாஸ்டரின் மேஜிக் & ராம் சரணின் மாஸ்: ஜானி மாஸ்டர் அமைத்த செம டஃப் ஆன ஸ்டெப்ஸை, ராம் சரண் அசால்ட்டாக ஆடித் தீர்த்துள்ளார். இயக்குநர் புச்சி பாபு சனா, கிராமத்து மண்மணத்தோடு பிரம்மாண்டமான காட்சிகளை இணைத்து ஒரு விஷுவல் ட்ரீட்டையே கொடுத்துள்ளார்.
வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் இந்த அதிரடித் திரைப்படம் ஏப்ரல் 30 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘பெத்தி’ ஆட்டம் ஆரம்பம்!

