மார்ச் 13 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘ரிசார்ட்’: கிச்சன் பாலிடிக்ஸ் முதல் ‘கெத்து’ செஃப் வரை!
ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) வழங்கும் லேட்டஸ்ட் அதிரடி வெப் சீரிஸ் ‘ரிசார்ட்’ ! வரும் மார்ச் 13 முதல் உங்கள் திரைகளில் வெளியாகிறது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று 4 புதிய எபிசோட்கள் என ரசிகர்களுக்குத் தொடர் விருந்து காத்திருக்கிறது!
எருமை சாணி விஜய்யின் அடுத்த அதிரடி: ‘எருமை சாணி’ புகழ் விஜய் குமார் ராஜேந்திரன் கதாநாயகனாக களமிறங்குவதுடன், இந்தத் தொடருக்குக் கதையும் எழுதியுள்ளார். சின்னத்திரை சூப்பர்ஹிட் இயக்குநர் பிரவீன் பென்னட் உடன் இவர் முதன்முறையாகக் கூட்டணி சேர்ந்துள்ளது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
கதை என்ன? ‘ஆர்.ஆர் ரிசார்ட்’ என்ற சொகுசு விடுதியில் நடக்கும் கதை இது. முறையான படிப்பு இல்லையென்றாலும், சமையலில் சக்கைப்போடு போடும் ஹவுஸ்கீப்பிங் ஊழியர் வெற்றி (விஜய்), ஒரு பெரிய ‘செஃப்’ ஆக வேண்டும் என கனவு காண்கிறார். ஒரு பக்கம் பெரிய லட்சியம், மறுபக்கம் வேலையில் அதிகாரிகளின் டார்ச்சர் – இந்த இரண்டையும் வெற்றி எப்படிச் சமாளிக்கிறார் என்பதுதான் கதையின் விறுவிறுப்பான கரு!
மிரட்டும் வில்லன் & நட்சத்திரப் பட்டாளம்: கோபக்கார ஹெட்-செஃப் ஆக ‘தலைவாசல்’ விஜய் வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார். இவர்களுடன் கீர்த்தி அமர், அபிநயா நேத்ரன், தர்ஷனா ஸ்ரீபால், சாய் தன்யா மற்றும் படவா கோபி எனப் பெரிய நட்சத்திரக் கூட்டமே இந்த ‘ரிசார்ட்’-ல் களம் இறங்கியுள்ளனர்.
காமெடி, டிராமா, லட்சியப் போராட்டம் என அனைத்தும் கலந்த ஒரு கம்ப்ளீட் பேக்கேஜாக இந்த சீரிஸ் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பார்க்கத் தயாராகுங்கள்: மார்ச் 13 முதல், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 4 எபிசோட்கள் ஜியோஹாட்ஸ்டாரில் (JioHotstar) மட்டும்!
ட்ரெய்லரைப் பார்க்க: இங்கே கிளிக் செய்யவும்

