‘Vowels’: ஏழு பாடல்கள்… ஐந்து கதைகள்! ஒரு காதல் மேஜிக்!

‘Vowels’: ஏழு பாடல்கள்… ஐந்து கதைகள்! ஒரு காதல் மேஜிக்!

ன்பு, ஏக்கம், பிரிவு என காதலின் பல வண்ணங்களை ஒருங்கே இணைத்து, ஓர் அழகான ‘அட்லஸ்’ போல உருவாகியிருக்கிறது ‘Vowels – An Atlas of Love’. ஐந்து கதைகள், ஐந்து இயக்குநர்கள், ஒரு காதல் பயணம் என மார்ச் 13-ம் தேதி திரையரங்குகளை ஆக்கிரமிக்கத் தயாராகிவிட்ட இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, நட்சத்திரங்களின் பங்களிப்போடு உற்சாகமாக நடைபெற்றது!

தொழில்நுட்பக் கலைஞர்களின் பெருமிதம்

படத்தின் முதுகெலும்பாக விளங்கும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மேடையில் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். படத்தொகுப்பாளர் ஹரிஷ் கொம்மே, “இது எனக்கு ஒரு புதுமையான அனுபவம்,” என நெகிழ்ந்த நிலையில், கலை இயக்குநர் மதி ஐந்து இயக்குநர்களுடன் பணியாற்றிய சவாலான மற்றும் சுவாரஸ்யமான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். 7 பாடல்களால் காதலை இசைமொழியில் வடித்திருக்கும் இசையமைப்பாளர் சரவணா சுப்ரமணியம், “காதலும் உயிரும் இணைந்ததுதான் இந்த Vowels,” எனப் படத்தின் தலைப்பிற்கு அழகான விளக்கம் அளித்தார்.இயக்குநர்களின் ஐந்து விதமான உணர்வுகள்

ஒரே படத்தில் ஐந்து இயக்குநர்கள் இணைந்திருப்பதுதான் இப்படத்தின் மிகப்பெரிய ஹைலைட்! இயக்குநர்கள் சங்கீத், சந்தோஷ் ரவி, ஹேமந்த் குமார், ஜெகன் ராஜேந்திரன் மற்றும் திலிப் குமார் ஆகியோர் ஒருமித்த குரலில் பேசுகையில்:

“பொதுவாக ஒரு படத்தில் ஒரு உணர்வுதான் பிரதானமாக இருக்கும். ஆனால் இதில் ஐந்து விதமான உணர்வுகளைக் கோர்த்திருக்கிறோம். யூகி சேது சார் மற்றும் சின்னி ஜெயந்த் போன்ற ஜாம்பவான்களுடன் பணியாற்றியது எங்களுக்கு ஒரு பெரிய பாடம்,” எனத் தங்கள் நெகிழ்ச்சியைப் பதிவு செய்தனர்.

நடிகர்களின் நம்பிக்கை மற்றும் எமோஷனல் கனெக்ட்

நடிகர் ராஜ் அய்யப்பா பேசுகையில், “மொழிகளைக் கடந்து இந்தப் படம் ரசிகர்களுடன் உணர்வுப்பூர்வமாக கனெக்ட் ஆகும்,” என நம்பிக்கை தெரிவித்தார். நீண்ட இடைவேளைக்குப் பின் திரையில் மின்னும் யூகி சேது, “இசையமைப்பாளர் சரவணா ஒரு சிறந்த இசைக் கலைஞராகத் தெரிவார்; குறும்படத் தொகுப்புகளும் சினிமாவில் பெரிய வெற்றி பெறும் என்பதற்கு இந்தப் படம் ஒரு முன்மாதிரியாக இருக்கும்,” எனப் படக்குழுவினரை உற்சாப்படுத்தினார்.மூத்த கலைஞர்களின் வாழ்த்தும் ‘ஜென்-ஸீ’ அழைப்பும்

தனக்கே உரிய பாணியில் கலகலப்பாகப் பேசிய சின்னி ஜெயந்த், “கர்நாடகாவில் இருந்து தமிழ் சினிமாவை நம்பி வந்திருக்கும் இந்த இளைஞர்களைத் தமிழ் ரசிகர்கள் நிச்சயம் கைவிடமாட்டார்கள்; இது ஒரு மாபெரும் வெற்றியாக அமையட்டும்,” என வாழ்த்தினார். இறுதியாகப் பேசிய விநியோகஸ்தர் ஹரி உத்ரா, “அடல்ட் மற்றும் வன்முறைப் படங்கள் பெருகிவரும் நிலையில், இன்றைய ‘ஜென்-ஸீ’ (Gen Z) தலைமுறை அவசியம் பார்க்க வேண்டிய எமோஷனல் திரைப்படம் இது,” எனத் திரையரங்குகளுக்கு ரசிகர்களை அழைத்தார்.


மார்ச் 13 முதல் ‘Vowels’ உங்கள் இதயங்களை வருடிச் செல்ல வருகிறது!

Related Posts