ஹாரர் + சயின்ஸ் பிக்க்ஷன்: மிரட்ட வரும் ‘நோவா’!

ஹாரர் + சயின்ஸ் பிக்க்ஷன்: மிரட்ட வரும் ‘நோவா’!

ஆதி, ஹன்சிகா நடித்த ‘பார்ட்னர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து ராயல் ஃபாச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ‘நோவா’ திரைப்படம் உருவாகியுள்ளது.

இருபதுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட மைலோ, இப்படத்தின் மூலம் இயக்குநராக வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன் இப்படத்தின் மூலம் அதிரடியான கம்பேக் கொடுக்கிறார்.

இது வெறும் ஹாரர் படம் மட்டுமல்ல, சயின்ஸ் பிக்சன், சூப்பர் நேச்சுரல் மற்றும் ஃபேண்டஸி எனப் பல ஜானர்கள் கலந்த ஒரு த்ரில்லர் அனுபவமாகும்.

கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நடைபெற்று முடிந்துள்ளது.

மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தம்பி ஜோ ஜான் சாக்கோ இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாவது கூடுதல் சிறப்பு.இவர்களுடன் துருவா, அத்விதி ஷெட்டி, கிருத்திகா பிஸ்வாஸ், சென்ராயன் எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது.

இசையமைப்பாளர் தமனிடம் பயின்ற யுவராஜ் சந்திரன் இசையமைக்க, கே.வி.குகனின் உதவியாளர் கிறிஸ்டோ பாப் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் தரத்தைப் பார்த்து வியந்த முன்னணி நிறுவனம் ஒன்று இதன் தெலுங்கு உரிமையைக் கைப்பற்றியுள்ளதால், தெலுங்கு டப்பிங் பணிகளும் விறுவிறுப்பாக நடக்கின்றன.

விரைவில் இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாக உள்ளன.

Related Posts