‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’: திரை விமர்சனம்

‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’: திரை விமர்சனம்

தென் மாவட்டத்தில் தமிழக மக்களால் வணங்கப்படும் ஒரு கடவுளின் பெயர் ஒண்டிமுனி.. நல்ல பாடன் என்பது விளை நிலத்தில் நன்றாக பாடுபடும் ஒரு விவசாயியை நல்ல பாடன் என அழைக்கின்றனர்..

ஒண்டிமுனிக்கும் நல்ல பாடனுக்கும் என்ன சம்பந்தம்.? என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை..

தன் சிறுவயது மகன் தவறுதலாக கிணற்றில் விழுந்து விட அவனைக் காப்பாற்ற நல்ல பாடன் முயற்சிக்கிறார்.. தான் வளர்க்கும் ஆடு கிடாயின் உயிரை எடுத்துக்கொண்டு தன் மகன் உயிரைக் காப்பாற்ற ஒண்டிமுனியிடம் வேண்டிக் கொள்கிறார்..

அதன் படி மகனும் பிழைக்கவே ஒரு கட்டத்தில் கிடாவை விருந்து வைக்க முயற்சிக்கிறார்..

ஆனால் அந்த ஊரில் இருக்கும் இரு பண்ணையார்களின் பிரச்சினையால் கோயில் திருவிழா எடுக்க முடியாமல் நல்ல பாடன் பிரச்சினைகளை சந்திக்கிறார்.. இதனால் பல வருடங்கள் கடந்து செல்கிறது

இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் மருமகன் வரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்.. அல்லது நகைக்கு பதிலாக அந்த கிடாவை விற்று பணம் கேட்கிறார்.. மற்றொருபுறம் மகன் தன்னுடைய காதலிக்காக அவள் கேட்டுக் கொண்டதற்காக டூ வீலர் வாங்க முயற்சிக்கிறார்.. அதுக்கு பணம் தேவைப்படவே அவர் இந்த கிடாவை விற்க முயற்சிக்கிறான்.

அடுத்தது என்ன நடந்தது.? அவர் நினைத்தபடி கிடா கடவுளுக்காக காணிக்கையாக கொடுக்கப்பட்டதா.? அல்லது கிடாவை மருமகன் / மகன் எடுத்துக் கொண்டாரா மகன்.? நல்ல பாடனாக நடித்த பரோட்டா முருகேசன் என்ன செய்தார்.? என்பதுதான் மீதிக்கதை.

வெண்ணிலா கபடி குழு படத்தில் சூரிக்கு பரோட்டாக்களை எண்ணி எண்ணி வைக்கும் மாஸ்டர் தான் பரோட்டா முருகேசன்.. இவர் பல படங்களின் நடித்திருந்தாலும் இந்த படத்தில் கதை நாயகனாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.. நல்ல பாடனுக்கு நல்ல பொருத்தம் இவர் என்பதை தன் நடிப்பில் நிரூபித்து இருக்கிறார்..வட்டிக்கு பணம் கேட்டு பண்ணையர்கள் சொல்லும் வேலையெல்லாம் எந்த சிரமமும் இல்லாமல் முடித்துக் கொடுக்கும் நல்ல படனாக நன்றாகவே உழைத்திருக்கிறார்..

பெரிய பண்ணாடியாக நடித்த கார்த்திகேசன் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்.. இவர் லாரா என்ற படத்தை தயாரித்தவர் மேலும் அறுவடை என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்..

அப்பாவி மனிதர்களை சதித்திட்டத்தால் வளைக்கும் வில்லத்தனத்தில் விளாசி இருக்கிறார்..

இவர்களுடன் நடித்த சின்ன பண்ணையார், மருமகன், மகள், மகன் மகனின் காதலி தன அனைவருமே நல்ல பாத்திரம்..

முக்கியமாக ஊர் மக்களும் சிறப்பான தேர்வு.. அதிலும் பெரிய பண்ணையார் சின்ன பண்ணையார் ஆகியோரின் மனைவிமார்களும் நடிப்பில் வெளுத்துக்கட்டி இருக்கின்றனர்.. இவர்கள் பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் சிரிப்பலை..

 

சுகவனம் என்பவர் இயக்கியிருக்கிறார்.. எந்த இடத்திலும் சோர்வை தராத திரைக்கதை அமைத்திருக்கிறார்.. கோயில் திருவிழா.. ஜாதி பிரச்சனை.. காதலில் பெண்களின் பேராசை.. தண்ணீர் பிரச்சனை, கிடா விருந்து அதனை சுற்றி நடக்கும் அரசியல் என அனைத்தும் கலந்து ஒரு கிராமத்தை விருந்து படைத்திருக்கிறார்.

ஒரு கிராமத்திற்கு சென்ற உணர்வை ஒளிப்பதிவாளர் விமல் தன் கேமராவில் அழகாக நம்மை உணர செய்திருக்கிறார்.. ஒவ்வொரு காட்சியும் அழகு என்ற சொல்லும் அளவிற்கு நம்மை ஒன்றை வைத்து விட்டார்..

பெரும்பாலும் இது போன்ற கிராமத்து படங்களுக்கு பாடல்கள் கைகொடுக்கும்.. ஆனால் பாடலே இல்லாமல் படத்தை முடித்து இருப்பது இயக்குனர் தன் கதை மீது வைத்த நம்பிக்கையை காட்டி இருக்கிறது.

கிளைமாக்ஸ் காட்சியில் கிராமத்து கிடா விருந்து வைத்து அதில் ஒரு விழிப்புணர்வு விருந்து கொடுத்திருப்பது இயக்குனர் சுகவனத்தின் திறமை.

ரேட்டிங்: 4.4/5

Related Posts