இயக்குநர் வாசு மகள் திருமணம்: திரை பிரபலங்கள் வாழ்த்து

‘சந்திரமுகி,’ ‘சின்ன தம்பி,’ ‘வால்டர் வெற்றிவேல்’ உள்பட பல வெற்றி படங்களை  இயக்கிய பி.வாசுவுக்கு, சக்தி வாசு என்ற மகனும், அபிராமி என்ற மகளும் உள்ளனர்.  சக்தி வாசு, தமிழ் பட உலகின் இளம் கதாநாயகர்களில் ஒருவராக இருக்கிறார்.   மகள் அபிராமி, ‘ஆர்கிடெக்ட்’ ஆக இருக்கிறார்.

இந்நிலையில், அபிராமிக்கும், செங்கல்பட்டை சேர்ந்த ஐ.ஆர்.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணனின் மகன்  பொன். சுந்தர் என்பவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. பொன்.சுந்தரும் ‘ஆர்கிடெக்ட்’ ஆக இருக்கிறார்.

நிச்சயிக்கப்பட்டபடி இன்று இவர்களது திருணம் சென்னை அடையாரில் உள்ள கிரவுன் பிளாசா ஓட்டலில்  சிறப்பாக நடந்தது.  

திரைத்துறையைச் ர்ந்த முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். .மாலை 6 மணிக்கு மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி அதே ஓட்டலில் நடைபெற்றது .

 

                                                                                                                               

Related Posts