திரைப்பட தணிக்கைக் குழு உறுப்பினர் ஆனார், நடிகர் & இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு!
திரைப்பட நடிகரும் இயக்குநரும், தயாரிப்பாளருமான இ.வி.கணேஷ்பாபு மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஆரம்பகாலத்தில் பத்திரிகையாளராக இருந்தவர். பிறகு, நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவர் இ.வி.கணேஷ்பாபு. பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்ததுடன், கட்டில் படத்தை தயாரித்து இயக்கவும் செய்தார். பிரபல சின்னத்திரை தொடர்களிலும் நடித்து உள்ளார்.
அதோடு, சிறந்த குறும்படங்களை இயக்கி கவனத்தை ஈர்த்தவர். இவர் இயக்கிய ஆசான் குறும்படம், சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றில் திரையிடப்பட்டது. அதே போல, இவர் இயக்கிய கருவறை என்ற குறும்படத்துக்கு இசை அமைத்த ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது கிடைத்தது.
மேலும், மத்திய மாநில அரசுகளின் விழிப்புணர்வு திரைப்படங்கள் பலவற்றை இயக்கி, நடித்து உள்ளார். குறிப்பாக, கடந்த தேர்தலின் போது இந்திய தேர்தல் ஆணையத்திற்காக இவர் இயக்கிய குறும்பங்கள் மக்களிடையே பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. மாநில அரசு சார்பாக கொரோனா விழிப்புணர்வு திரைப்படங்களும் மக்களை ஈர்த்தன.
தற்போது தமிழக அரசு சார்பாக, ‘போதை இல்லா தமிழ்நாடு’ என்ற விழிப்புணர்வு பாடலை எழுதி இயக்கி இருக்கிறார். இதில் ஆடுகளம் ஜெயபாலன், அபி சரவணன் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.
இந்நிலையில், மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினராக இ.வி.கணேஷ்பாபு நியமிக்கப்பட்டு உள்ளார்.
பத்திரிகையாளராகவும் இருந்தவர், சமூகப்பார்வை கொண்டவர், திரைத்துறை மீது காதல் கொண்டவர் என்று அனைத்து விதத்திலும் தகுதியான நபரான இ.வி.கணேஷ்பாவு, திரைப்பட தணிக்கை வாரிய உறுப்பினரானது மிகம் பொருத்தமானது. அவருக்கு நமது tamilankrual.com இதழின் சார்பில் வாழ்த்துகள்.
