காலையில் குடிப்பதற்கு எது நல்லது டீயா? காஃபியா?
காலை எழுந்தவுடன் முதலில் நமது நாக்கின் சுவைக்கு சூடான தீனி அவசியம். அதில் எது சிறந்தது டீ அல்லது காஃபி. காலையில் எழுந்தவுடன் இரண்டில் ஒன்றை சாப்பிடாவிட்டால் சிலருக்கு தலையே வெடித்து விடும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுவை பிடிக்கும். ஆனால் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்க கூடியதில் இந்த இரண்டில் இது நல்லது.
உடலுக்கு காஃபியா, டீயா?
நமது உடலுக்கு தேவையானது ஆரோக்கியமானது. இந்த இரண்டிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய கஃபைன் என்ற வேதிப் பொருள் நிறைந்துள்ளது.
ஆனால் இந்த இரண்டு பானங்களும் அனைத்து தரப்பு மக்களும் காலையில் எழுந்த உடன் நாக்கின் சுவைக்கு பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது இந்த பானங்கள். டீயை நாம் எடுத்துக் கொண்டால் பால் டீ, லெமன் டீ, க்ரீன் டீ, ஐஸ்டீ என பல வகையாக தயாரிக்கப்படுகிறது.
இதே போன்றுதான் காபியையும் பால் சேர்த்தது சேர்க்காதது என்று பட்டியலும் நீலும். மேற்கூறிய இரண்டு பானங்களும் தங்களுக்கு புத்துணர்வு அளிக்கக்கூடிய வகையில் இருக்கிறது என்கின்றனர் பேரும்பாலனோர்.
உன்மையில் இரண்டுமே காலை சோர்க்வைப் போக்கி புத்துணர்வை அளிக்கக்கூடியதுதான்.
எதுவாக இருந்தாலும் அளவுக்கு அதிக மாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலில் கஃபைன் சேரும்போது நரம்பு தளர்ச்சி, கவலை, எரிச்சல், வயிறு மற்றும் வாயு பிரச்னை, சீரற்ற இதயத் துடிப்பு போன்ற பிரச்னைகளை உண்டாக்கும்.
இதற்காகவே கஃபைன் சார்ந்த பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்ளக்கூடாது.
அமெரிக்க உணவு ஆராய்ச்சி மையம் 4-5 ஸ்மால் கப் காபியில் 400மிகி அளவு மட்டுமே கஃபைன் இருக்க வேண்டும். இந்த அளவு அதிகமானால் உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
காஃபி,டீ நன்மை தீமை;
- ஒரு கப் ப்ளாக் காஃபியில் 100மிகி கஃபைன்.
- ஒரு கப் டீயில் 55மிகி கஃபைன்.
இந்த இரண்டும் சேர்ந்து பல நன்மைகளைச் செய்தாலு சில தீமைகளையும் செய்கிறது. எதுவாக இருந்தாலும் பால் மற்றும் சர்க்கரை சேர்க்காமல் குடிப்பதே சிறந்தது என்கின்றனர் வள்ளுனர்கள்
காஃபியில் இருக்கும் அதிகப்படியான் கஃபைனால் கேஸ் ப்ராப்ளம் அல்லது அலர்ஜி வரலாம். ஆகவே ப்ளாக் காபியை விட ப்ளாக் டீயே நல்லது.
ப்ளாக் காஃபி நன்மைகள்;

பிளாக் காஃபி அல்ஸைமர், டைப்2 டயாபடீக்ஸ், டெமிண்டியா பாதிப்பு, எனெர்ஜி மற்றும் உடலுக்கு வலிமையைக் கொடுப்பதாக் கூறபடுகிறது. மேலும் இது டீயை விட ப்ளாக் காபி வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறதாம்.
பிளாக் டீ நன்மைகள்;
காஃபியை விட டீ நிறைய வகையில் கிடைக்கிறது.
க்ரீன் டீ
ப்ளாக் டீ
வொயிட் டீ
ஊலாங்டீ
டீயில் நிறைய ரிச் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருக்கிறது. நம் இதயத்தை பாதுகாக்கவும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இந்த இரண்டில் எது நல்லது என்று தேர்வு செய்து குடிப்பது உங்கள் விருப்பம்.
உடல் சோர்வை உடனடியாக போக்குவது என்றால் காஃபிக்கு முதல் இடம். ஆரோக்கியம் என்றால் அதிக கஃபைன் இல்லாமல் உடல் சோர்வை போக்கும் டீயே ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். பால் சேர்க்காமல் குடிப்பதே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

