“சூரி செய்த சாதனை!”: ‘கருடன்’  ட்ரெயிலர் விழாவில் விஜய் சேதுபதி!

“சூரி செய்த சாதனை!”: ‘கருடன்’  ட்ரெயிலர் விழாவில் விஜய் சேதுபதி!

சூரி, சசிகுமார், சமுத்திரக்கனி, உன்னி முகுந்தன்,. ஷிவதா, ரோஷனி ஹரிப்ரியன், மைம் கோபி, வடிவுக்கரசி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள கருடன்,  வரும் மே மாதம் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் கதையை வெற்றிமாறன் எழுத படத்தை இயக்கியுள்ளார் துரை செந்தில் குமார்.

இந்த நிலையில் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

சமுத்திரகனி, வெற்றிமாறன், துரை செந்தில்குமார் உள்ளிட்ட படக் குழுவினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, சூரிக்கு மிகப்பெரிய பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்.

மேலும் அவர், “தொடர்ந்து காமெடியனாக செயல்பட்டு வந்த சூரி, ஒரு கட்டத்தில் தன்னை ஹீரோவாக வெளிப்படுத்தி வெற்றி பெற்று உள்ளார். இதுபோல ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறுவது மிகவும் கடினமான விஷயம். இது ஒரு சாதனை.

இந்த படத்தின் ட்ரெயிலரில் வருவது போல அவருக்கு இயற்கை சிறப்பான வகையில் உதவி செய்யட்டும்.

நம்முடைய மண்ணின் அழகான முகம் சூரியினுடையது. அவருக்கு மதுரையில் இருந்து மட்டும் இல்லாமல் அகில உலக அளவில் ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை கொடுப்பார்கள்” என்று பாராட்டினார் விஜய் சேதுபதி.

 

 

Related Posts