“நான் மட்டும் சிவகார்த்திகேயனாகவோ, விஜய்சேதுபதியாவோ இருந்தா..”: கருடன் பட விழாவில் சூரி அதிரடி!

“நான் மட்டும் சிவகார்த்திகேயனாகவோ, விஜய்சேதுபதியாவோ இருந்தா..”: கருடன் பட விழாவில் சூரி அதிரடி!

சூரி நடித்துள்ள கருடன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா  சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக விஜய் சேதுபதி, வெற்றி மாறன், சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் சூரியிடம், “ஒரு நாள் சிவகார்த்திகேயனோட உடம்பிலோ, விஜய் சேதுபதியின் உடம்பிலோ நீங்கள் கூடு விட்டு கூடு பாய்ந்தால் என்ன செய்வீர்கள்” என்கிற கேள்வியை தொகுப்பாளர் எழுப்பினார்.அதற்கு சூரி,  “ஒரு நாள் கூடுவிட்டு கூடு பாய்ந்து தம்பி சிவகார்த்திகேயன் உடம்புக்குள் சென்றால் உடனடியாக 10 தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸை வாங்கி போட்டுக்கொண்டு ஹேப்பியாக இருந்து விடுவேன். விஜய் சேதுபதி உடம்புக்கு சென்றால் தமிழ் பட தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி பாலிவுட் தயாரிப்பாளர்களிடமும் அட்வான்ஸை வாங்கி போட்டுக் கொள்வேன். மேலும், ஆன் தி வேயில் அமீர் கானை வா மாமா என்றும் ஷாருக்கானை என்ன மச்சான் எப்படி இருக்க என்றும் தீபிகா படுகோனிடம் 2 நிமிஷம் பேசிட்டும் வந்துடுவேன். அதுக்குள்ள ஒரு நாள் முடிந்துவிடும். அதன் பின்னர் இவர்கள் பொறுப்பு” என இருவரையும் மேடையில் வைத்துக் கொண்டு கலகலப்பாக பேசி அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தினார் சூரி.

 

Related Posts