57 ஆண்டுகளுக்குப் பிறகு,படித்த பள்ளிக்கு சென்று TC வாங்கிய திரைப்பட இயக்குனரின் தாயார்!
தனது எட்டாம் வகுப்பு மாற்றுச் சான்றிதழை (டி.சி.) 57 வருடங்கள் கழித்து பெற்றுள்ளார், திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகரான கணேஷ்பாபுவின் தாயார் விஜயலட்சுமி.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் உள்ளது அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி. இது முன்பு இருபாலர் பள்ளியாக இருந்தது. அங்கு 1967 ஆண்டு 8ஆம் வகுப்பு பயின்றபோது படிப்பை தொடர இயலாமல் இடைநின்றார்
விஜயலட்சுமி ( 13 வயதில் மற்றும் இப்போது)
இந்நிலையில் 57 ஆண்டுகளுக்குப் பிறகு, மாற்றுச்சான்றிதழுக்கு (டி.சி.) விண்ணப்பித்தார். அதற்கான சான்றுகளையும் சமர்ப்பித்தார். பள்ளி நிர்வாகம் ஆவணங்களை சரிபார்த்து, கந்தர்வக்கோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெ. பழனிவேல் சான்றிதழை வழங்கினார்.
டி.சி.யை வாங்கிய விஜயலட்சுமி, கண்கலங்கியபடி, “வாழ்வின் பொக்கிஷமாக இதை பாதுகாப்போம்” என்றார்.
பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமான இ.வி. கணேஷ்பாபுவின் தாயார் விஜயலெட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது