“கைது செய்யறது இருக்கட்டும்; படத்தை பாருங்க!”: ‘அஞ்சாமை’ இயக்குநர் அழைப்பு!

“கைது செய்யறது இருக்கட்டும்; படத்தை பாருங்க!”: ‘அஞ்சாமை’ இயக்குநர் அழைப்பு!

‘திருச்சித்ரம் புரொடக்சன்ஸ்’ சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாக்க, அறிமுக இயக்குனர் எஸ் பி சுப்புராமன் உருவாக்கத்தில் விதார்த், ரஹ்மான், வாணி போஜன்  உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘அஞ்சாமை’.

‘நீட் தேர்வினால் ஏற்பட்டுள்ள பாதிப்பை மிக சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறது’ என்று பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில்,  “நீட் தேர்வை தடுக்கும் வகையில் படம் உருவாக்கப்பட்டு உள்ளது. நாடு முழுதும் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில், காட்சிகள் உள்ளன.

அஞ்சாமை பட தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், நடிகைகளை கைது செய்ய வேண்டும்” என்று சென்னை காவல் ஆணையர் அலுலகத்தில் ஆர்.டி.ஐ. செல்வம் என்பவர், புகார் அளித்து உள்ளார்.

இது திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், அஞ்சாமை பட  இயக்குநர் எஸ்.பி.சுப்புராம் தனது முகநூல் பதிவில் தெரிவித்து உள்ளதாவது:“இந்திய நாட்டின் குடிமகன்களுக்கும் எனது நலம் விரும்பிகளுக்கும் வணக்கம்.

‘அஞ்சாமை’ திரைப்படத்தை தடை செய்யக்கோரி ஒரு சகோதரர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.  இதுதான் நம் நாட்டின் ஜனநாயகம்.

அந்த சகோதரருக்கு என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், அவர் ஒரு சிறந்த தந்தைக்கு மகனாக தான் இருப்பார்..

அவர் தயவுசெய்து, ‘அஞ்சாமை’  திரைப்படத்தைப் பார்த்து ஒரு தந்தையின் வலிகளையும் அர்ப்பணிப்புகளையும் தெரிந்து கொண்டால் அவருக்கு தன் தந்தையின் அன்பு புரியும். அந்த  அன்புச் சகோதரருக்கு இப்படத்தை பார்க்க இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இதன் மூலமாக அழைப்பு விடுகின்றேன்.

நன்றி!

வணக்கம்!’- இவ்வாறு இயக்குநர் எஸ்.பி.சுப்புராம் தெரிவித்து உள்ளார்.

Related Posts