‘யோலோ‘ : திரைப்பட விமர்சனம்

‘யோலோ‘ : திரைப்பட விமர்சனம்

எம்ஆர் மோஷன் பிக்சர்ஸ் சார்பில், மகேஷ் செல்வராஜ் தயாரிக்க, எஸ் .சாம் இயக்கத்தில் தேவ், தேவிகா, ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம், யோலோ. கதையை ராம்ஸ் முருகன் எழுதியிருக்கிறார். தேவ், தேவிகா, எழுதியிருக்கிறார். பிரேம்குமார், படவா கோபி, விஜே நிக்கி, சுபாஷினி கண்ணன், பிரவீன், யுவராஜ் கணேசன், சுவாதி, திவாகர், கலைக்குமார் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். சகீஷனா சேவியர் இசை அமைத்திருக்கிறார்

ஹீரோ தேவ் யோலோ என்ற யூ டியுப் சேனலை நடத்திக் கொண்டு வருகிறார். இதில் அவர் மக்களிடம் பிராங்க் செய்யும் வீடியோக்களை பதிவு செய்து லாபம் பார்க்கிறார். இன்னொரு பக்கம் நாயகி தேவிகா தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். தேவிகாவின் அப்பா படவா கோபி. இவர் சிறு வயதிலிருந்தே தன்னுடைய அப்பாவின் சொல்லை மீறாதவர். இந்த சூழலில் தேவிகாவிற்கு படவா கோபி திருமண ஏற்பாடுகளை செய்கிறார்.

பெண் பார்ப்பதற்காக விஜே நிக்கியின் குடும்பம் தேவிகா வீட்டிற்கு வருகிறது. தேவிகாவை பார்த்த நிக்கியின் சகோதரி, “உங்களுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதே. எதற்கு மீண்டும் திருமணம் செய்கிறீர்கள்” என்கிறார்.

இதைக் கேட்டு தேவிகா குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். நிக்கியின் சகோதரி, “தேவ் என்பவரோடு தேவிகாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. அமெரிக்காவுக்கு ஹனிமூன் கூட வந்திருந்தார்கள். அப்போதுதான் சந்தித்து பேசினோம்” என்கிறார்.

அதை தேவிகாவின் பாஸ்போர்ட் உறுதிப்படுத்துகிறது.ஆனால் தேவிகாவுக்கு இது எதுவுமே நினைவில் இல்லைை.

தேவுக்கும் அப்படி திருமணம் நடந்ததாக நினைவில்லை.

அதன் பிறகு என்ன நடந்தது என்பதை சுவாரஸ்யமாகச் சொல்லி இருக்கிறார்கள்.

நாயகன் தேவ் இயல்பாக நடித்து இருக்கிறார். காதல் மோதல் என அனைத்து காட்சிகளிலும் முத்திரை பதிக்கிறார். பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம் அவருக்கு ப்ளஸ்.

நாயகி தேவிகாவும் சிறப்பாக நடித்து உள்ளார்.

சகீஷனா சேவியரின் இசை, சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவு இரண்டும் படத்துக்கு பலம்.

ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை படம் சுவாரஸ்யமாக செல்லகிறது, குறிப்பாக இடைவெளிக்கு பல டுவிஸ்டுகளுடன் வேகம் கூடுகிறது. தொழில்நுட்ப ரீதியாகவும் படம் சிறப்பாக உள்ளது.

சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் அதைக் கடந்து விறு விறு திரைக்கதையில் நம்மை உட்காரவைத்து விடுகிறார் இயக்குநர்.

அனைவரும் ரசித்துப் பார்க்கலாம்.

ரேட்டிங்: 3.1/5

Related Posts