கொரோனா குறைவு!: உலக சுகாதார நிறுவனம் இந்தியாவுக்கு பாராட்டு

“இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது” என அச்சமூட்டும் செய்திகளுக்கே ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன.

இந்நிலைியல் கவனிக்கத்தக்க தகவல் ஒன்றை உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் திட்ட இயக்குனர் டாக்டர் மைக்கேல் ரேயான் கூறுகையில், ““உலகம் முழுதுமே கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது என்பதை மறுக்க முடியாது. தவிர, மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் வைரஸ் பரவல் அதிகரிப்பது இயல்பான ஒன்றே.

அதே நேரத்தில் நாம் ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும். அதாவது, இந்தியாவில், தவிர, அதிகளவில் பரிசோதனைகள் நடத்தப்படுவதால், தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் கூடுதலாக தெரிகிறது.

ஆனாலும் கொரோனாவால் ஏற்படும் மரணம் இந்தியாவில் குறையாகவே உள்ளது..

உலக அளவில் கொரோனாவாஸ். ஒரு லட்சம் மக்கள் தொகையில், 6.04 என்ற விகிதம் பேர் இறக்கின்றனர். மற்ற நாடுகளில் இது அதிகமாகவே உள்ளது.

இங்கிலாந்து, 63.13, ஸ்பெயின் 60.60, இத்தாலி 57.19, அமெரிக்கா 36.30, ஜெர்மனி 27.32, ரஷ்யா 5.62 என்று உள்ளது.

ஆனால் இந்தியாவில், ஒரு லட்சம் பேருக்கு, ஒருவர் என்ற அளவில்தான் மரணம் ஏற்படுகிறது

இப்படி இந்தியாவில் கொரோனா மரணமங்கள் குறைவாக இருப்பதற்குக் காரணம்,  இந்தியாவில் உரிய நேரத்தில் தொற்றுகளை கண்டறிதல், அவர்களின் தொடர்புகளை கண்டறிதல், திறமையான சிகிச்சை முறை ஆகியவைதானஅ.

மேலும், இந்தியாவில், குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது, இது 56.38 சதவீதமாக உள்ளது” என உலக சுகாதார நிறுவனத்தின் திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.

எஸ்.யாழினி