அப்போதே சொன்ன அ.ம.மு.க.!

தேர்தலில் அனைத்து கட்சிகளும் வாக்குறிதகள் கொடுப்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் சில கட்சிகள் மட்டுமே,  கவனத்தை ஈர்க்கும் வாக்குறிதகள் சிலவற்றைக் கொடுக்கும்.

அந்த வகையில் கடந்த வருடம் நடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது, அ.ம.மு.க.  கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அளித்த வாக்குறுதியில்  ஒன்று முக்கியமானது. அதுவும் தற்போதைய சூழலில் கவனிக்கத்தக்கதும் கூட .

அப்போது,அமமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி அளித்த வாக்குறுதிகளில் ஒன்றாக,   “. காவலர்களுக்கு உரிய மனநல ஆலோசனை வழங்கப்படும்” என்பது குறிப்பிடப்பட்டு இருந்தது.

சாத்தான் குளத்தில், தந்தையும், மகனும் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டனர் என்ற புகார் எழுந்திருக்கும் நேரத்தில் இதை கவனிப்பது அவசியமாகிறது.

சமூக ஆர்வலர்கள், “அந்தக் காவலர்கள் செய்தது மிகக் கொடுமையான குற்றம். அதற்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். அதே நேரம், காவலர்களுக்கு    மனநல ஆலோசனை மிகவும் அவசியம். அவர்கள் ஒரு நாளைக்கு பல மணி நேரம் உழைக்கிறார்கள். தவிர, அவர்களுக்கு பணிச்சுமை அதிகம்.

இந்த நிலையில், அதிகாரம் மிக்க பொறுப்பில் இருக்கும் அவர்களுக்கு மனநல ஆலோசனை அவசியம்” என்று குறிப்பிடுகிறார்கள்.

சட்டப் பிரமுகர்கள், “காவலர்களுக்கு மனநல ஆலோசனை அளிக்கப்பட வேண்டும் என்பதும், வாரம் ஒருமுறை காவல் நிலையத்தில் இது நடைபெற வேண்டும் என்பதும் ஏற்கெனவே இருக்கும் உத்தரவுதான். அது செயல்படுத்த வேண்டும்” என்கிறார்கள்.

இனியன்