இதுவரை செய்யாததை செய்தார் கமல்!
“கமல் ஒரு மிகப்பெரிய கலைஞர்!” என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
அதே நேரம், சக கலைஞர்களை பாராட்டுவதில் கஞ்சத்தனம் காட்டுகிறார் என்ற விமர்சனம் உண்டு. அதேபோல தனது ரசிகர்களின் நற்பணிகளைப் பாராட்டினாலும், அவர்களது கலைத்திறமைக்கு அங்கீகாரம் கொடுத்தாரா என்பது முக்கிய கேள்வி.
ஆனால், தற்போது, தன்னைப்போலவே நடனமாடிய இளைஞரை பாராட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில், “நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு .
என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை!” என்று குறிப்பிட்டு உள்ளார்.
இது அனைவரையும் கவர்ந்திருக்கிறது. அவரது பதிவுக்கு பலரும் லைக், கமெண்ட் போட்டு வருகிறார்கள்.