கொரோனா: அமெரிக்கா, இங்கிலாந்து புது முயற்சி
தற்போது, கொரோனா பரிசோனை என்பது, சளி மாதிரியை எடுத்து செய்யப்படுகிறது. இந்நிலையில், மாற்று வழி ஒன்றை இங்கிலாந்து பயன்படுத்த ஆரம்பித்து உள்ளது.
தற்போது, கொரோனா இருக்கிறதா என்பதை அறிய, நீண்ட துணி அல்லது பஞ்சு துடைப்பான் மூலம் தொண்டையிலிருந்து சளி மாதிரியை எடுத்து பரிசோதனை செய்யப்படுகிறது. சில சமயம், தொண்டையில் சளி இல்லாவிட்டால், மாதிரி எடுப்பது சிரமமாகிவிடுகிறது. மேலும், தொண்டையில் பஞ்சு அல்லது துணியைச் செலுத்துவது, வேறு சில பிரச்சினைகளை ஏற்படுத்தி விடுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில், எச்சிலை வைத்து கொரோனா பரிசோதனை செய்யப்படுவது ஆரம்பித்து உள்ளது. இந்தமுறை வெற்றி பெற்றுள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது.
இதே போல இங்கிலாந்திலும் இம்முயற்சி துவங்கப்பட்டுள்ளது.
இந்த முறையில், தொண்டையில் இருந்து சளியை எடுக்க வேண்டியது இல்லை. சிறு கிண்ணத்தில் எச்சிலைத் துப்பி அதைப் பரிசோதனை செய்து கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்துகொள்ளலாம்.
மேலும் இரு நாட்களில் முடிவை அறியலாம்.
அதே நேரம் இம்முயற்சி ஆராய்ச்சி நிலையிலேயே இருப்பதாக அந்நாடுகள் அறிவித்துள்ளன என்றும் இது வெற்றி பெற்றால், கொரோனா பரிசோதனைகள் எளிதாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்..
இனியன்