சீனாவுக்கு எதிராக இந்த இயக்குனர் போல் செய்ய முடியுமா?

இந்தியாவின் லடாக் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன ராணும், இருபது இந்திய வீரர்களை கொன்றது. இந்தியாவின் பதிலடியில் நாற்பதுக்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினர் இறந்தனர்.

இந்நிலையில், “சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும்!” என்று இந்தியா முழுதும் உணர்ச்சிவசமான முழக்கம் எழுந்தது. சீன பொருட்களை விற்ற சில கடைகளை அடித்து நொறுக்கியதும் நடந்தது.

ஆனால், சீன பொருட்களை இங்கே பலர் பயன்படுத்துகிறார்கள். அந்த பொருட்களை யாரும் எடுத்து வீசவில்லை. அவர்கள், “பணம் கொடுத்து வாங்கிவிட்டேன். அதனால் அதை உடைக்க மனமில்லை. இனி சீன பொருட்களை வாங்காமல் இருப்பேன்” என விளக்கம் கொடுத்தனர்.

இந்நிலையில், சார்லி சாப்ளின், மகாநடிகர் உட்பட, பல படங்களை இயக்கிய  சக்தி சிதம்பரம்,     வித்தியாசமான காரியம் ஒன்றை செய்திருக்கிறார்.

தான் பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்திய  சீன தயாரிப்பு பொருட்களை தீ வைத்து எரித்தார்.

 இவர், நேற்று முன்தினம் இரவு, தன் வீட்டில் இருந்த சீன டேப்ரிக்கார்டர்கள், மொபைல் போன் உள்ளிட்ட, எலக்ட்ரானிக் பொருட்களை எரித்தார்.

இது குறித்து அவர் கூறும்போது,  “இந்திய வீரர்கள், 20 பேரை கொன்று மிரட்டி வரும் சீனா மீது, பொருளாதார தடை விதிக்க வேண்டும். அவர்கள் தயாரித்த பொருட்களை, நாம் யாரும் பயன்படுத்தவே கூடாது. இதற்கு நாமே முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக, சீன பொருட்களை தீயிட்டு எரித்தேன். இனி நான், சீன தயாரிப்பு பொருட்களை பயன்படுத்த மாட்டேன்!” என்றார்.

இனியன்

Related Posts