“நீ நடி கண்ணா!” சூப்பர் ஸ்டாரின் வார்த்தை: ‘வித் லவ்’ விழாவில் அபிஷந்த் நெகிழ்ச்சி!

“நீ நடி கண்ணா!” சூப்பர் ஸ்டாரின் வார்த்தை: ‘வித் லவ்’ விழாவில் அபிஷந்த் நெகிழ்ச்சி!

“குட் நைட்”, “லவ்வர்”, “டூரிஸ்ட் ஃபேமிலி” என ஹாட்ரிக் ஹிட் கொடுத்த MRP Entertainment உடன் சௌந்தர்யா ரஜினிகாந்த் கைகோர்த்திருக்கும் படம்! பிப்ரவரி 6-ஆம் தேதி ரிலீஸ். இதோ விழாவின் கலகலப்பான பேச்சுக்கள்:

  டீம் மெம்பர்ஸ் ஸ்பீச்:

  • ப்ரியா ரவி (காஸ்டியூம் டிசைனர்): “இந்தக் குழு ஒரு குடும்பம் மாதிரி! அபிஷன், அனஸ்வரா கூட வொர்க் பண்ணது செம எக்ஸ்பீரியன்ஸ்.”

  • சுரேஷ் (எடிட்டர்): “என்னை அறிமுகப்படுத்திய மதன் சாருக்கு நன்றி. படம் சூப்பரா வந்திருக்கு, சப்போர்ட் பண்ணுங்க!”

  • ஷ்ரேயாஸ் கிருஷ்ணா (ஒளிப்பதிவாளர்): “கதை கேட்டப்போவே ஸ்கூல் மெமரீஸ் எல்லாம் வந்துடுச்சு. மதன் கதையை அழகா சொல்லியிருக்காரு, திரையிலும் அது அப்படியே வந்திருக்கு.”


 ஆக்டர்ஸ் ரவுண்ட்-அப்:

  • ஹரீஷ்: “மதன் ‘அபிஷந்த் தான் ஹீரோ’னு சொன்னப்போவே எனக்கு செம ஹேப்பி! என் ரோலும் இதுல வேற லெவல்ல இருக்கு.”

  • சச்சின்: “ஷூட்டிங் போன மாதிரியே இல்ல, தினமும் பிக்னிக் போன மாதிரி இருந்துச்சு. ஒரு பாஸிட்டிவ் எனர்ஜி தரும் படம் இது.”

  • காவ்யா: “இது எனக்கு ரொம்ப ஸ்பெஷலான நாள். மதன், சௌந்தர்யா மேம், மகேஷ் அண்ணாவுக்கு பெரிய தேங்க்ஸ்!”


 இசை & சினிமா செலிபிரிட்டீஸ்:

  • மோகன்ராஜன் (பாடலாசிரியர்): “ஷான் ரோல்டன் மியூசிக்ல பாட்டுக்கள் பட்டய கிளப்பும். அனஸ்வரா நடிப்பைப் பார்த்து எல்லா பசங்களுக்கும் ‘இப்படி ஒரு பொண்ணு கிடைக்காதா’னு தோணும்!”

  • தேசிங் பெரியசாமி (இயக்குநர்): “சௌந்தர்யா மேடத்தோட அந்த நேர்மை தான் படத்தோட வெற்றி. அபிஷந்த் ஒரு பெரிய ஹீரோவா வருவாரு!”

  • ரஞ்சித் ஜெயக்கொடி (இயக்குநர்): “அபிஷந்த் – அனஸ்வரா ஜோடி செம க்யூட். இது ஒரு பக்காவான ஹிட் மூவி.”

  • சிபி சக்கரவர்த்தி (இயக்குநர்): “படம் பாத்துட்டேன்… தயாரிப்பாளருக்கு பணம் மழையா பொழியப்போகுது! இது யூத்ஸை திரும்பத் திரும்ப பார்க்க வைக்கும்.”

  • அருண் விஷ்வா (தயாரிப்பாளர்): “சிறை படத்துக்கு அப்புறம் ஒரு திருப்தியை இந்தப் படம் கொடுத்துச்சு. புது டீமுக்கு சப்போர்ட் பண்ணுங்க.”

  • மணிகண்டன் (நடிகர்): “இதோட சிம்பிளிஸிட்டி தான் பெரிய பலம். ஜாஃபர், அனிஷா கேரக்டர்ஸ் எல்லாம் சூப்பர். மனசை விட்டு நீங்காத காட்சிகள் இதுல இருக்கு.”


 மெயின் பிக்சர் – ஷான் & மதன்:

  • ஷான் ரோல்டன் (இசையமைப்பாளர்): “ஒரு ஹீரோயின்க்காக நான் விசில் அடிப்பேன்னு நினைச்சதே இல்ல, ஆனா அனஸ்வரா நடிப்புக்கு விசில் அடிச்சேன்! சௌந்தர்யா ரஜினிகாந்த் எனக்கு ஒரு நல்ல நண்பர்.”

  • மதன் (இயக்குநர்): “அபிஷந்த் முதல்ல ஹீரோவா நடிக்க தயங்கினாரு, ஆனா பாலா தான் அவரை சம்மதிக்க வச்சாரு. சௌந்தர்யா மேம் கதை கேட்ட பாதி நேரத்துலயே ‘பண்ணலாம்’னு சொல்லிட்டாங்க. இது ஒரு டீம் வொர்க்!”


  ஸ்டார் ஆஃப் தி ஷோ – அனஸ்வரா & தயாரிப்பாளர்கள்:

  • அனஸ்வரா ராஜன்: “தமிழ் ரசிகர்கள் காவ்யாவை கண்டிப்பா காதலிப்பாங்க! மதன் ஒரு க்யூட்டான டைரக்டர். ‘மோனிஷா – சத்யா’ கெமிஸ்ட்ரிக்கு அபிஷந்த் கூட இருந்த நட்பு தான் காரணம்.”

  • மகேஷ் ராஜ் (தயாரிப்பாளர்): “சௌந்தர்யா அக்காவோட பேர் பக்கத்துல என் பேர் வர்றதே பெருமை. ரஜினி சார் தான் அபிஷந்துக்கு இருந்த தயக்கத்தை உடைச்சாரு.”

  • சௌந்தர்யா ரஜினிகாந்த்: “கோவா படம் ரிலீஸாகி இன்னையோட 16 வருஷம் ஆகுது. மதன் ஒரு பெரிய டைரக்டரா வருவாரு. சிபி மேல எனக்கு நம்பிக்கை இருக்கு, #Thalaivar173 டெட்லியா இருக்கும்!”


  ஹீரோ ஸ்பீச் – அபிஷந்த் ஜீவிந்த்:

“எல்லாத்துக்கும் காரணம் தலைவர் ரஜினிகாந்த் சார் தான்! ‘நீ நடி கண்ணா’னு அவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை தான் எல்லாத்தையும் மாத்துச்சு. இந்தப் படத்தின் வெற்றியை சூப்பர் ஸ்டாருக்கே அர்ப்பணிக்கிறேன்!”

Related Posts