“டார்க் ஜெயின்ட்”: மிரட்டல் டைட்டில் வெளியீடு!

“டார்க் ஜெயின்ட்”: மிரட்டல் டைட்டில் வெளியீடு!

“டார்க் ஜெயின்ட்” திரைப்படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா பரணி ஸ்டுடியோவில் கோலாகலமாக அரங்கேறியது.  திரையில் அதிர்வலைகளை ஏற்படுத்தப் போகும் இந்த ஹாரர் த்ரில்லர் திரைப்படத்தில், நடிகை சோனியா அகர்வால் மற்றும் தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் இயக்குனர் பாக்யராஜ் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் மின்னுகிறார்கள்.

இவர்களுடன் லிவிங்ஸ்டன், அவரது மகள் ஜோவிட்டா, ‘அயலி’ மதன், விஜய் டிவி அமுதவாணன் மற்றும் ஆதர்ஷ் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே கைகோர்த்துள்ளது. கூடுதல் சிறப்பாக, ஹாலிவுட் நடிகர் ரபிக் பாட்சா இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கம்பீரமாக அறிமுகமாகிறார்!இயக்குனர் KS கிஷன் கதைக்களத்தை செதுக்க, விக்னேஷ் ராஜாவின் இசை மற்றும் சங்கீத் மணிகோபாலின் ஒளிப்பதிவு எனத் தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்கள் வித்தையைக் காட்டக் காத்திருக்கிறார்கள். தேசத்தைக் காத்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் லோகேஸ்வரன், ‘பயோவன் கிரியேஷனிசம்’ எனும் பேனரில் மிகுந்த ஆர்வத்துடன் இப்படத்தைத் தயாரிக்கிறார். கோபிசெட்டிபாளையம் மற்றும் சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நிறைவடைந்த நிலையில், பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பு பாயத் தயாராகிவிட்டது.

விரைவில் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, அதைத் தொடர்ந்து படத்தின் முதல் பார்வை மற்றும் இசை வெளியீடு என வரிசையாக அறிவிப்புகள் வெளியாக உள்ளன. திரையரங்குகளில் ரசிகர்களைத் திகிலில் ஆழ்த்த ஏப்ரல் மாதத்தில் “டார்க் ஜெயின்ட்” திரைக்கு வரும் என ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts